குறட்டைவிட்டு தூங்கும் கே.ஏன்.நேரு!! கொட்டாவி விடும் ஐ,பெரியசாமி!! சமூக வலைத்தளங்களில் கலாய் வாங்கும் கலகல போட்டோ

Published : Feb 27, 2019, 12:00 PM ISTUpdated : Feb 27, 2019, 12:05 PM IST
குறட்டைவிட்டு தூங்கும் கே.ஏன்.நேரு!! கொட்டாவி விடும் ஐ,பெரியசாமி!! சமூக வலைத்தளங்களில் கலாய் வாங்கும் கலகல போட்டோ

சுருக்கம்

கிராமசபை கூட்டத்தில் கனிமொழி அருகில் அமர்ந்திருக்கும் கே.என் நேரு, குறட்டை விட்டு தூங்குவதும், பக்கத்தில் ஐ.பெரியசாமியும் தூக்க களைப்பில் கொட்டாவி விடும்போது எடுக்கப்பட்ட போட்டோ இணையத்தில் செம்ம கலாய் வாங்கி வருகிறது.

கிராமசபை கூட்டத்தில் கனிமொழி அருகில் அமர்ந்திருக்கும் கே.என் நேரு, குறட்டை விட்டு தூங்குவதும், பக்கத்தில் ஐ.பெரியசாமியும் தூக்க களைப்பில் கொட்டாவி விடும்போது எடுக்கப்பட்ட போட்டோ இணையத்தில் செம்ம கலாய் வாங்கி வருகிறது.

திமுக சார்பில் கிராமங்கள் தோறும் ஊராட்சி சபை கூட்டம் நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்து தனது முதல் பயணத்தை திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் திமுக மாநிலங்கள் அவை MP கனிமொழி   தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 4 ஊராட்சி ஒன்றியங்களில் 28 ஊராட்சி சபை கூட்டங்கள், தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 5 ஊராட்சி ஒன்றியங்களில் 19 ஊராட்சி சபை கூட்டங்களில்  பேசி வருகிறார்.

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட உள்ளதாக தகவல்பரவி வரும் நிலையில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில்12 நாட்கள் கனிமொழி முகாமிட்டு, மக்களை சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

கனிமொழி  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளதால் அந்த பகுதியை சேர்ந்த கிராமத்தை தத்தெடுத்து அதற்கான உதவிகளை செய்து வருகிறார். மேலும் தனது சார்பில் சிறு சிறு உதவிகளையும் தூத்துக்குடி மக்களுக்கு பரவலாக செய்து வருவதாக சொல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கூட்டுடன் காடு கிராமத்தில் ஸ்டாலின் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. அதில் கனிமொழி அருகில் அமர்ந்திருக்கும் கே.என் நேரு, குறட்டை விட்டு தூங்குவதும், பக்கத்தில் ஐ.பெரியசாமியும் தூக்க களைப்பில் கொட்டாவி விடும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கலாய்ப்புக்கு உள்ளாகின்றன.

கனிமொழி பங்கேற்கும் கூட்டங்களில் முழுக்க பெண்கள் கூட்டம் தான். முக மலர்ச்சியோடு கனிமொழியை அனைவரும் வரவேற்கிறார்கள். குறிப்பாக பெண் குழந்தைகள் கனிமொழியை பார்த்ததும் ஆர்வத்துடன் துள்ளி குதிக்கின்றனர்.  குழந்தைகளும் கனிமொழியை பார்க்க குஷியாக வருகின்றனர். கனிமொழியும் அந்த சிறுமிகளுக்கு கையை கொடுத்து கொண்டே உற்சாகப்படுத்தும் போட்டோக்கள் வலைத்தளங்களில் வைரலாக வரும் அதே வேலையில் இப்படி கலாய்க்க வைக்கும் போட்டோக்களும் இணையத்தில் தெறிக்க விடுகின்றன.

PREV
click me!

Recommended Stories

அஜிதா ஆக்னஸ் தற்கொ*லை முயற்சி?.. விஜய்யை சந்திக்க முடியாததால் விபரீத முடிவு.. பரபரப்பு தகவல்!
மு.க.ஸ்டாலினை ரவுண்டுகட்டும் நெருக்கடிகள்... கால்வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி.. திகிலில் திமுக..!