கூண்டோடு காலியான கிருஷ்ணகிரி மாவட்டம் !! ஷாக் ஆன ரஜினி !!

Published : Feb 27, 2019, 11:32 AM IST
கூண்டோடு காலியான கிருஷ்ணகிரி மாவட்டம் !!  ஷாக் ஆன ரஜினி !!

சுருக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ரஜினி மக்கள் மன்றத்தினர், சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுகவில் இணைந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள், ரஜினி மக்கள் மன்றத்தில் தங்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படாததாலும், தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாலும் மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவித்தனர். 

மேலும், தமிழக மக்களுக்கு மகத்தான வழியில் செயலாற்றிவரும் தலைவர்களில் திமுக தலைவர் ஒருவரே இருக்கிறார் என்றும் இதனால்  மாவட்ட தொண்டர்கள் 500 பேருடன் திமுக கட்சியில் இணைந்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 23 ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள், ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். ரஜினி கட்சி தொடங்காமல் இழுத்துக் கடத்தி வருவதால் விரக்தியடைந்த ரசிகர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர்.

இப்படி ரஜினி ரசிகர்கள் கொத்து கொத்தாக திமுகவில் இணைவது ரஜினிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த  20 க்கும் மேற்பட்டோர் மன்றத்தில் இருந்து நீக்கி ரஜினி அதிரடியாக உத்தர/விட்டுள்ளார்

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?