kishore k swamy: கிஷோர் கே.சாமி மீதான குண்டர் சட்டம் ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

Published : Dec 23, 2021, 03:02 PM IST
kishore k swamy: கிஷோர் கே.சாமி மீதான குண்டர் சட்டம் ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

சுருக்கம்

முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி குறித்தும் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும் அவதூறாக பல பதிவுகளை பதிவிட்டு வந்தார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், கிஷோர் கே.சாமியை 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி அவதூறாக பரப்பிய வழக்கில் கிஷோர் கே சாமி மீதான குண்டர் தடுப்பு சட்டத்தைசென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.  

முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி குறித்தும் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும் அவதூறாக பல பதிவுகளை பதிவிட்டு வந்தார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், கிஷோர் கே.சாமியை 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, கடந்த ஜூன் 28ம் தேதி வரை செங்கல்பட்டு சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், கிஷோர் கே சாமி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார். 

இதையடுத்து கிஷோர் கே சாமி ஜாமீன் கோரி தாம்பரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து சென்னை ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அறிவுரை கழகத்தில் கிஷோர் கே சாமி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த அறிவுரைக்கழகம் கிஷோர் கே சுவாமி மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை உறுதி செய்தது.

இச்சூழலில் தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி கிஷோர் கே சுவாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கிஷோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எம்ஜிஆர், ஜெ. காலத்தில் இருந்த வரவேற்பு.. TVKவில் மனமகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.. செங்கோட்டையன் ஓபன் டாக்
ஜனவரியில் அதிர்ச்சி..! தவெக மற்றொரு அதிமுகவாக மாறும்..! இனிமேல் அதிமுக கிடையாது..! செங்கோட்டையன் சூளுரை..!