
விவசாயப்படிப்பு படிப்பு படிப்பேன் என பேட்டி அளித்த அனிதாவால் எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும் எனவும் அனிதாவின் மரணம் குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
நீட் முறையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறாது என தமிழக அரசு சொல்லி வந்தாலும் திடீரென உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுகிறோம் என கூறி கையை விரித்தது.
இதனால் அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா பனிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் 1172 மதிப்பெண்கள் பெற்றும் நீட்டில் தேர்ச்சி பெற முடியாமல் போனது.
இதனிடையே மருத்துவ படிப்பு இல்லையென்றால் விவசாயம் படிப்பேன் என அனிதா பேட்டியளித்தார்.
இதைதொடர்ந்து மனமுடைந்த அனிதா கடந்த வெள்ளிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். அதில், திருமாவளவன், முத்தரசன், திருநாவுக்கரசர், ஜி.ராமக்கிருஷ்ணன் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, விவசாயப்படிப்பு படிப்பு படிப்பேன் என பேட்டி அளித்த அனிதாவால் எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும் எனவும் அனிதாவின் மரணம் குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் எதிர்கட்சிகள் வாக்குகளை அதிகமாக பெறுவதற்காக அனிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்கின்றனர் என குறிப்பிட்டார்.