#BREAKING பாமக வேட்பாளர் அதிரடி மாற்றம்.. ஜி.கே மணி அறிவிப்பு..!

Published : Mar 18, 2021, 11:08 AM ISTUpdated : Mar 18, 2021, 11:13 AM IST
#BREAKING பாமக வேட்பாளர் அதிரடி மாற்றம்.. ஜி.கே மணி அறிவிப்பு..!

சுருக்கம்

சட்டப்பேரவை தேர்தலில் கீழ்வேளூர்(தனி) தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் கீழ்வேளூர்(தனி) தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 23 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், நாகை மாவட்டம் கீழ்வேளூர்(தனி) தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வேத.முகுந்தனுக்கு பதிலாக  அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய வடிவேல் ராவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாட்டில் வரும் 06.04.2021 அன்று நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், நாகப்பட்டினம் மாவட்டம் 164, கீழ்வேளூர் (தனி) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வேத.முகுந்தன் அவர்கள் மாற்றப்படுகிறார். 

அவருக்குப் பதிலாக கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் பாமக வேட்பாளராக போட்டியிடுவார் என்பதை பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி