மனித இனம் அழிந்து வருவது இதுபோன்ற சம்பவங்களின் பிரதிபலிப்புதான்... விஜயகாந்த் ஓபன் டாக்..!

Published : Jun 04, 2020, 05:23 PM IST
மனித இனம் அழிந்து வருவது இதுபோன்ற சம்பவங்களின் பிரதிபலிப்புதான்...  விஜயகாந்த் ஓபன் டாக்..!

சுருக்கம்

இந்த சம்பவம் மனிதாபிமானத்துக்கு ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது. இத்தகைய செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், கொரோனா போன்ற பல வைரஸ்கள் பரவி மனித இனம் அழிந்து வருவது, இதுபோன்ற சம்பவங்களின் பிரதிபலிப்பாகத் தான் பார்க்கிறேன்.

கருவுற்றிருந்த யானையை வெடி வைத்துக் கொன்ற அந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து கேரள அரசு கண்டறிந்து, அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனையை வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் வனப்பகுதிக்குள் இருந்து காட்டு யானை ஒன்று பசியுடன் ஊருக்குள் வந்துள்ளது. பசியுடன் தெருவில் சுற்றிய கருவுற்றிருந்த அந்த யானைக்கு அன்னாசி பழத்தில் வெடிமருந்தை வைத்து சிலர் கொடுத்துள்ளன. அதனை அந்த யானை சாப்பிட்ட போது, அதன் வாயிலேயே வெடிமருந்து வெடித்து பரிதாபமாக உயிரிழந்தது வேதனை அளிக்கிறது.

இந்த சம்பவம் மனிதாபிமானத்துக்கு ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது. இத்தகைய செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், கொரோனா போன்ற பல வைரஸ்கள் பரவி மனித இனம் அழிந்து வருவது, இதுபோன்ற சம்பவங்களின் பிரதிபலிப்பாகத் தான் பார்க்கிறேன்.

யானையை வெடி வைத்துக் கொன்ற அந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து கேரள அரசு கண்டறிந்து, அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனையை வழங்க வேண்டும். காட்டு யானையை கொன்றது ஒட்டு மொத்த மக்களுக்கும் மன வேதனையை உண்டாக்கியுள்ளது என்று விஜயகாந்த் கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!