குஷ்புவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா? இல்லையா? பொன்னார் கூறிய அதிரடி பதில்..

By Ezhilarasan BabuFirst Published Mar 12, 2021, 12:01 PM IST
Highlights

காங்கிரஸ்க்கு எதிராக புதிய வியூகம் வகுக்க தேவையில்லை என்றார்,  கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் திமுக கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 19 ஆண்டுகளாக கொண்டு வந்த திட்டங்களை விட 5 மடங்கு தான் கொண்டு வந்ததாக தெரிவித்தார். 

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி வழிபாடு செய்த பின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ்க்கு எதிராக புதிய வியூகம் வகுக்க தேவையில்லை என்றார்,  கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் திமுக கம்யூனிஸ்ட், காங்கிரஸ்  உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 19 ஆண்டுகளாக கொண்டு வந்த திட்டங்களை விட 5 மடங்கு தான் கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

ஐந்து ஆண்டுகளில் 40 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்றார், கன்னியாகுமரி தொகுதியில் ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டதாக நினைக்கிறார்கள், பெட்ரோல் டீசல் விலை என்பது நாடு சம்பந்தப்பட்டது, பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது, இது தேர்தலில் எந்த எதிரொலியும் ஏற்படுத்தாது என தெரிவித்தார். 

குஷ்புவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், 20 தொகுதியில் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் யாருக்கு வாய்ப்பு என பேச வேண்டிய தேவையில்லை என்றார், மம்தா பானர்ஜி தாக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், வழுக்கி விழுந்தது எல்லாம் தேர்தல் வியூகமாக கொண்டு வருவது வேடிக்கையாக இருக்கிறது. துணிச்சலான பெண் என சொல்லிக் கொள்ளும் அவர் வழுக்கி விழுந்ததற்கெல்லாம் பாஜக காரணம் எனக் கூறினால் உலகம் அவரை பார்த்து சிரிக்கும் என கூறினார்.
 

click me!