டுவிட்டரில் இருந்து வெளியேறினார் குஷ்பு...! "நேரம் விரயமாகுதாம்"

First Published Jul 18, 2017, 5:45 PM IST
Highlights
Khushboo left out on Twitter


சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் இருந்து சில காலம் விடைபெறுவதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர்  குஷ்பு தெரிவித்துள்ளர்.

டுவிட்டரில் கருத்து சொல்வதில் முதன்மையானவர் நடிகை குஷ்பு. அவரிடம் எந்தவித கேள்வியானாலும் அது தொடர்பாக கருத்து சொல்வதில் முதன்மையாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நடிககை குஷ்பு, டுவிட்டர் பக்கத்தில் இருந்த வெளியேறுவதாக
கூறியுள்ளார்.

இது தொடர்பாக, வார நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, காலையில் எழுந்தவுடன் டுவிட்டரில் என்ன வந்துள்ளது, எந்த கருத்தைப் பதிவு செய்யலாம், உலகில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க செல்போனில் டுவிட்டரை தேடுகிறோம்.

இது காலப்போக்கில் டுவிட்டருக்கு அடிமையாவதைப்போல் தோன்றியது. தூங்கி எழுந்திருக்கும்போதே செல்போனைத்தான் கை தேடுகிறது. இதனாலேயே டுவிட்டரில் இருந்து வெளியேற முடிவு செய்தேன்.

ஆனால், கொஞ்ச நாள் கழித்து மீண்டும் வருவேன். டுவிட்டர் என்னை அடிமையாக்குகிறது. நேரமும் விரயமாகுது. பிடித்தவர்களிடம் பேச முடியவில்லை. 

தொடக்கத்தில் புத்தகம் வாசிப்பதுதான் என் பொழுதுபோக்காக இருந்தது. திரும்பவும் நிறையப் புத்தகங்கள் படிக்கத் திட்டமிட்டுள்ளேன்.

சமூக வலைத்தளங்களில் மட்டும்தான் நமது கருத்தைச் சொல் வேண்டும் என்ற அவசியம் இல்லை. எங்கிருந்து வேண்டுமானாலும் நம்முடைய கருத்தை சொல்லலாம்.

அதேபோல என்னுடைய கருத்துக்கு எதிர் கருத்த எங்கிருந்து வேண்டுமானாலும் சொல்லலாம். டுவிட்டருக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று நடிகை குஷ்பு கூறினார்.

click me!