சிறைக்குள் பையுடன் உலா வரும் சசிகலா – வைரலான வீடியோவால் பரபரப்பு…

Asianet News Tamil  
Published : Jul 18, 2017, 05:17 PM ISTUpdated : Sep 19, 2018, 12:54 AM IST
சிறைக்குள் பையுடன் உலா வரும் சசிகலா – வைரலான வீடியோவால் பரபரப்பு…

சுருக்கம்

The video is posted on social networks such as the visit of the general secretary of the AIADMK Sasikala prison in Bangalore Agrahar jail in the property accumulation case

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறைக்குள் ஜாலியாக உலா வருவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜெ மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற பிறகு அவரின் ஆதிக்கம் அதிமுகவில் அதிகமாக காணப்பட்டது.

இதனால் ஒபிஎஸ் சசிகலாவை விட்டு பிரிந்து சென்று போர்கொடி தூக்கினார். இதையடுத்து சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா அங்கும் தனது ஆதிக்கத்தை தலை தூக்கியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா உயரதிகாரிகள் சசிகலாவிடம் லஞ்சம் பெற்று கொண்டு சிறப்பு வசதிகள் செய்து தந்துள்ளதாக குற்றசாட்டை முன் வைத்தார்.

இதனால் சிறைத்துறை ஐஜி, காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜெயிலுக்கு வெளியே ஷாப்பிங் மாலுக்கு சென்றிருக்க கூடிய சசிகலாவின் புதிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளன. இதில், கருப்புநிற சல்வார் உடையில் கையில் பையுடன் சசிகலா வீடியோவில் வலம் வருகிறார் சசிகலா.

அவருடன் இளவரசியும் வருவது போன்று வீடியோவில் பதிவாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அங்கிருக்கும் யாருக்கோ கை காட்டி கொண்டே உள்ளே செல்கிறார்.

சசிகலாவுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இதுபோன்ற வீடியோக்கள் வெளி வந்திருப்பது பெரும் பகீரை கிளப்பியுள்ளது.  

PREV
click me!

Recommended Stories

ஓபன் சேலஞ்ஜ்-க்கு தயார்..! என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்..!
காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!