2011-ல் குஷ்புவுக்கும் வடிவேலுக்கும் கூட்டம் கூடியது ஆனால் அது ஓட்டாக மாறவில்லை.. காய்ச்சி எடுத்த அமைச்சர்.

By Ezhilarasan BabuFirst Published Jan 12, 2021, 12:51 PM IST
Highlights

ரஜினியிடம் அதிமுக ஆதரவு கேட்குமா என்ற கேள்விக்கு, இந்த நேரத்தில் ஒன்றுமில்லை. தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளது. தேர்தல் வியூகம் உள்ளது. அவர் சொல்வர் இவர் சொல்வார் என எதார்பார்க்கவில்லை.

2011-ல் குஷ்புவுக்கும் வடிவேலுக்கும் கூட்டம் கூடியது. ஆனால் திமுகாவால் ஜெயிக்க முடியவில்லை. நடிகர்களுக்கு கூட்டம் கூடுவதை ஓட்டு என்று நினைக்க முடியாது. நடிகர் கமலஹாசனை காண மக்கள் கூட்டம் கூடும். ஆனால் வாக்காக மாறாது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மதுரை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் 26 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 13 லட்சத்து 16ஆயிரம் ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து  மேடையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது: ரஜினியிடம் அதிமுக ஆதரவு கேட்குமா என்ற கேள்விக்கு, இந்த நேரத்தில் ஒன்றுமில்லை. தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளது. தேர்தல் வியூகம் உள்ளது. அவர் சொல்வர் இவர் சொல்வார் என எதார்பார்க்கவில்லை. ரஜினி எது நன்மை என தெரிந்து சொல்வார். 

 

எதில் ஊழல் இல்லை என ஸ்டாலின் கூறியுள்ளார். பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்தது திமுக. பார்ப்பவர் கண்நோக்கம் தான். தான் திருடி பிறரை பழி சொல்லுதல் போல ஸ்டாலின் தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு கூறுகிறார். உதயநிதி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார். அவர் தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.  தந்தை எவ்வழியோ அதையே மகன் செய்கிறார். உதயநிதியின் பரப்புரைகள் விமர்சனங்கள் மக்களை பாதிக்கிறது. உதயநிதி அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். யாருடைய கோட்டையையும் யாரும் உடைக்க முடியாது. நடிகருக்கு கூட்டம் கூடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 2011 குஷ்புவுக்கும் வடிவேலுக்கும் கூட்டம் கூடியது. ஆனால் திமுகாவால் ஜெயிக்க முடியவில்லை. அதை ஓட்டு என்று நினைக்க முடியாது.

அதேபோல்தான் நடிகர் கமலஹாசனை காண மக்கள் கூட்டம் கூடும். அது வாக்காக மாறாது. மிகப்பெரிய அடித்தளம் உள்ள திமுக நடிகர்கள் பிரச்சாரம் செய்த போது தோற்றது. கமலஹாசன் எம்மாத்திரம். ஆளுங்கட்சியை தவறாக பேசுவதே ஸ்டாலினின் நிலைப்பாடு. அரசை குறை கூறுவதையே வாடிக்கையாக வைத்திருப்பதால் மக்கள் இவருக்கு வேறு வேலை இல்லை என நினைத்து விட்டனர். எங்களுடன் கூட்டணி அமைப்பவர்கள் வெற்றி பெற நாங்கள் உழைப்போம். முதல்வர் வேட்பாளராக பழனிச்சாமியை ஏற்பவர்களோடு தேர்தலை சந்திப்போம், உழைப்போம். என்றார். 
 

click me!