காங்கிரஸுடன் முக்கிய கட்சி இணைப்பு... 'பவருடன்' மோடியின் குகைக்குள் நுழைந்து குடைந்தெடுக்கக் கிளம்பிய ராகுல் காந்தி..!

By Thiraviaraj RMFirst Published May 31, 2019, 3:29 PM IST
Highlights

எதிர்கட்சி தலைவர் அந்தஸ்துடன் நாடாளுமன்றத்திற்கு சென்று பாஜக அமைச்சர்களை கேள்விகளால் துளைத்தெடுக்க தயாராகி விட்டார் ராகுல்.

மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்து கன்னாபின்னாவென கதறித் துடிப்பதால் காங்கிரஸ் கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியை இணைக்க முயற்சிகள் நடைபெற்று வருதவாகக் கூறப்படுகிறது.

 

பாஜக பிரதமர் நாற்காலியை பறித்துக் கொண்டதற்கு பொறுபேற்று காங்கிரஸ் தலைவர் பதவி ராஜினாமாவை பெற மறுத்து 5 நாட்களாக அரசியல் தலைவர்களை சந்திக்காமல் முடங்கிக் கிடந்த ராகுல்காந்தி நேற்று பதவியேற்பு விழாவில் சுரத்தே இல்லாமல் பங்கேற்றார். இந்நிலையில், டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார் ராகுல். 

இன்னும் நட்பையும், கட்சியையும் வலுப்படுத்தும் வகையில் தேசியவாத காங்கிரசை காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பது குறித்து இருவரும் தீவிர டிஸ்கஸனில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அது மட்டும் நடந்து விட்டால், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் 57-ஆக உயரும். அதன்படி 52 தொகுதிகளை மட்டுமே வைத்துள்ளதால் எதிர்கட்சி தலைவராக முடியாத ராகுல் அந்தப் பதவியை எட்டிப்பிடித்து விடுவார். ஆனால் இதனை விமர்சித்துள்ள பாஜக, தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட காங்கிரஸ் பதவிக்காக குறுக்கு வழி தேடி வருகிறது என கூறியுள்ளது. 

1999-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு சோனியாகாந்தி தலைமை ஏற்றதை பொறுக்க முடியாமல் முட்டிக்கொண்டு கட்சியை விட்டுக் கிளம்பி தேசியவாத காங்கிரசை தொடங்கினார் சரத் பவார். ஆனாலும், இந்த 20 ஆண்டுகளாக மத்திய - மாநிலத்திலும் சரத் பவாரால் பவரை காட்டமுடியவில்லை. ஆகையால், காங்கிரஸுடன் தனது கட்சியை இணைக்க முடிவெடுத்து விட்டார் சரத் பவார். இதனால் எதிர்கட்சி தலைவர் அந்தஸ்துடன் நாடாளுமன்றத்திற்கு சென்று பாஜக அமைச்சர்களை கேள்விகளால் துளைத்தெடுக்க தயாராகி விட்டார் ராகுல். 

click me!