போலீசாருக்கு முக்கிய வேலை இருப்பதால் மதுக்கடை பாதுகாப்பில் ஈடுபடுத்த முடியாது... முதல்வர் பினராயி அதிரடி..!

By vinoth kumarFirst Published May 6, 2020, 3:49 PM IST
Highlights

கேரளாவில் மே 17ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு அனுமதி இல்லை என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். போலீசாருக்கு முக்கிய பணிகள் இருப்பதால் மதுக்கடை பாதுகாப்பில் ஈடுபடுத்த முடியாது என்று கூறியுள்ளார். 

கேரளாவில் மே 17ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு அனுமதி இல்லை என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். போலீசாருக்கு முக்கிய பணிகள் இருப்பதால் மதுக்கடை பாதுகாப்பில் ஈடுபடுத்த முடியாது என்று கூறியுள்ளார். 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மத்திய அரசு சில தளர்வுகளும் அறிவித்துள்ளது. சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி, மகாராஷ்ரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று முன்தினம் முதல்  மதுக்கடைகளை திறக்கப்பட்டன. நாளை முதல் தமிழகத்திலும் மதுக்கடைகள் திறக்க உள்ளன. 

இந்நிலையில், கேரளா மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு தளர்வு குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பினராயி விஜயன் கேரளாவில் ஊரடங்கு காலம் முடைவடையும் மே 17ம் தேதி வரை மதுக்கடைகளை திறக்க அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளார். போலீசாருக்கு முக்கிய பணிகள் இருப்பதால் மதுக்கடை பாதுகாப்பில் ஈடுபடுத்த முடியாது என்றும் கூறியுள்ளார். 

மேலும், வழிபாட்டு தலங்களையே திறக்காதபோது மதுக்கடைகளை திறப்பது மக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும். மதுக்கடைகளை திறப்பதால், மக்கள் வீட்டுக்கு இருக்கும் நல்லெண்ணத்தையும் குலைக்கும் என  முதல்வர் கூறியுள்ளார். 

click me!