சிறந்த முதல்வர்கள் பட்டியல்... லிஸ்டில் இல்லாத எடப்பாடி!! வெளியானது கருத்துக்கணிப்பு முடிவுகள்...

Published : Mar 23, 2019, 06:45 PM IST
சிறந்த முதல்வர்கள் பட்டியல்... லிஸ்டில் இல்லாத எடப்பாடி!! வெளியானது கருத்துக்கணிப்பு முடிவுகள்...

சுருக்கம்

இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் உள்ள முதல்வர்களில் யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்ற கருத்துக்கணிப்பை IANS நிறுவனம் நடத்தியுள்ளது அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த லிஸ்ட்டில் எடப்பாடி பழனிசாமி கடைசி இடத்தில் உள்ளார். 

அந்த கருத்துக்கணிப்பில் முடிவில், தெலுங்கானா மாநில முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார் என அம்மாநில மக்கள் 68 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் சிறப்பாக செயல்படும் முதல்வர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். 

இந்த பட்டியலில் ஹிமாச்சல பிரதேச முதல்வர் 58.3 சதவீதம் பேர், ஒரிசா முதல்வவர்க்கு 55.5 சதவீதம் பேர், டெல்லி முதல்வர் 51.9 சதவிகிதம் பேர், பிஹார் முதல்வர் 47.0  சத்தீஸ்கர் முதல்வர் 43.9 சதவிக்கிரம் பேர் எந டுத்தடுத்த இடங்களில் உள்ள இந்த கருத்துக்கணிப்பில் புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடைசி இடங்களில் உள்ளனர் அதிலும்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெறும் 18 சதவிகிதம் வாக்கு வாங்கி குறைந்த மதிப்பெண்கள் பிடித்து பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளனர். 

தமிழகத்தை பொறுத்தவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடு திருப்தியளிக்கவில்லை என 42 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு