திமுக தலைவர் கருணாநிதி ரத்த அழுத்த குறைபாடு காரணமாக, வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கருணாநிதி, சென்னை ஆழ்வார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். நள்ளிரவிலேயே கருணாநிதி ரத்த அழுத்தம் சரியாகிவிட்டது, என்று காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.
முதல் இரவில் இருந்து அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு காவிரி மருத்துவமனை சார்பில் வெளியிட்ட அறிக்கையில், காவிரி அறிக்கை வெளியாகி, 24 மணி நேரம் ஆகிவிட்டதால், இன்று இரவு அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது காவேரி மருத்துவமனையின் அறிக்கை வெளியாகியுள்ளது.
undefined
சரியாக 9:50 க்கு வெளியான இந்த அறிக்கையில், முதல் வரியிலேயே பின்னடைவு என குறிப்பிட்டுள்ளனர். அடுத்த வரியில் உடல்நிலை சீராக உள்ளது என கூறியுள்ளனர். ஆனால் நேற்றைய அறிக்கையை ஒப்பிட்டு பார்க்கையில் தர்க்காலிக பின்னடைவு என அறிக்கையில் வெளியாகியுள்ளது.
உடல்நிலையில் பின்னடைவு என அறிக்கையில் குருப்பிட்டிருந்தாலும், மருத்துவ உபகரணங்கள் உதவியோடும் , மருத்துவ நிபுணர்கள் உதவியோடு சிகிச்சை தொடர்ந்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.