OPS ம் வேண்டாம்  EPS ம் வேண்டாம்…  எம்எல்ஏக்கள் யாரைத் தேர்வு செய்யலாம்? யோசனை சொல்கிறார் கட்ஜு…

 
Published : Feb 16, 2017, 06:55 AM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
OPS ம் வேண்டாம்  EPS ம் வேண்டாம்…  எம்எல்ஏக்கள் யாரைத் தேர்வு செய்யலாம்? யோசனை சொல்கிறார் கட்ஜு…

சுருக்கம்

OPS ம் வேண்டாம்  EPS ம் வேண்டாம்…  எம்எல்ஏக்கள் யாரைத் தேர்வு செய்யலாம்? யோசனை சொல்கிறார் கட்ஜு…

 

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட பின் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அக்கட்சியின் சட்டமன்ற குழுத்தலைவராக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

 

தற்போது ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது

இந்நிலையில், அடுத்த முதலமைச்சராக யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்களுக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ அறிவுரை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக  கட்ஜூ தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தமிழகத்தில் யார் முதலமைச்சராக யார் வரவேண்டும் என்ற தலைப்பில் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி என இரண்டு பேருமே சசிகலா கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் என குறிப்பிட்டுள்ளார்.

ஓபிஎஸ் மீதும் புகார்கள் உள்ளன. அந்த புகார்கள் எல்லாம் உண்மைதானா என்று ஒருபுறம் சர்ச்ச் நடைபெற்று வரும் நிலையில் அவர் தன்னை திடீரென  ஒரு நல்லவராக காட்டிக்கொள்கிறார் . அவருக்கு போதுமான எம்எல்ஏ க்களின் ஆதரவும் இல்லை என கட்ஜு தெரிவித்துள்ளார்.

இதனால்  OPS ம் வேண்டாம்  EPS ம் வேண்டாம் இவர்களுக்கு மத்தியில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஆர்.நடராஜை அடுத்த முதல்வராக தேர்வு செய்ய வேண்டும் என்று கட்ஜு தனது பேஸ்புக் புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

தான்  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த போது சென்னை மாநகர காவல்துறை ஆணையராக நடராஜ் பணியாற்றியவர். என்றும் அவர் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி என்றும் கட்ஜு தெரிவித்துள்ளார்.

 

 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!