எடப்பாடி, ஸ்டாலின் -ட்ட பணத்தை வாங்கிப்போம், ஆனா ஓட்டு போடுறது தினகரனுக்குதான்: செம்ம காண்டில் இருக்கும் காசிமேடு.... 

First Published Dec 19, 2017, 8:15 PM IST
Highlights
Kasimedu voters Planing against Edappadi and stalin for RK Nagar By election


குஜராத், இமாச்சல் பிரதேசம் என இரண்டு மாநிலங்களுக்கு நடந்த தேர்தலில் குஜராத்தி ஆட்சியை தக்க வைத்திருக்கும் பி.ஜே.பி., இமாச்சலில் ஆட்சியை அமைக்கிறது. ஆக சர்வமும் ‘காவி மயம்’ என்றாகி நிற்கிறது நிலை அங்கு.

ஆனால் அதே பி.ஜே.பி.யான் தமிழகத்தின் தலைநகரில் உள்ள ஒரேயொரு தொகுதியில் முன்னிலை கூட வேண்டாம் அட மூன்றாவது இடம் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியை விடவும்,  லெட்டர்பேடு கட்சிகள் மற்றும் டம்மி சுயேட்சைகள் இணைந்த ‘மற்றவை’ எனும் கேட்டகரியை விடவும் மோசமாக சர்வேயில் வாகுகளை பெற்று கட்டக்கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பது அவமானம், அவலம். 

தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்று நடத்தியிருக்கும் ஆர்.கே.நகர் சர்வேயில் பா.ஜ.க.வுக்கு 1 சதவீத வாக்குகள் கூட விழவில்லை. நாம்தமிழர் 5.1% பெற்றிருக்க, ’மற்றவர்கள்’ எனும் முகமறியா  கூட்டம் 15.2% பெற்றிருக்க, பி.ஜே.பி.க்கோ 0.5% வாக்கு(கள்) தான் கிடைத்திருக்கிறது. 

இந்த சர்வே சொல்லும் மேலும் சில ஹைலைட்ஸ்:

*    விஷால் நம்பியது இந்த தொகுதியிலுள்ள தெலுங்கு பேசும் மக்களை. ஆனால் அம்மக்கள் அதிகம் வசிக்கும் காமராஜர் நகரிலேயே ‘எங்க மொழிக்காரர்னா அவரை ஆதரிக்கணுமா? மொதல்ல சினிமா சங்கத்துல அவரை நிரூபிக்க சொல்லுங்க, அப்புறம் அரசியலுக்கு வரச்சொல்லுங்க.’ என்றிருக்கிறார்கள். 

*    ’அரசியல்வாதிங்களா விரும்பி பணம் கொடுக்கும்போது அதை வாங்கிக்குறதுல என்ன தப்பு?’ என்று வழக்கம்போல் நியாயப்படுத்தி இருக்கின்றனர். 

*    இரட்டை இலைக்கும், குக்கருக்கும்தான் செம்ம போட்டி என்பது கண்கூடு. அதில் மதுசூதனன் தினகரனிடம் ஏக சவாலை வாங்கிக் கொண்டிருக்கிறார். காசிமேடு பகுதியில் மீனவர்கள் ஆளுங்கட்சி மேல் ’செம்ம காண்டில்’ இருக்கிறார்கள்.

*    வழக்கமாக தி.மு.க.விற்கு விழும் இஸ்லாமியர் வாக்குகள் கூட இந்த முறை டி.டி.வி. பக்கம் கணிசமாக செல்வது ஆச்சரியத்தை கூட்டுகிறது. 

*    அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கொடுக்கிற பணத்தை வாங்கிக்குவோம் ஆனா ஓட்டு போடுறது தினகரனுக்குதான் என்றும் சிலர் சொன்னார்களாம் காசிமேட்டில். 

*    பணப்பட்டுவாடாக்களை தாண்டி ஏழைக்கட்சியான சீமான் கட்சி கவனம் பெறுவது ஆரோக்கியமானதே. 

*    பெண்களில் ஒருவர் கூட பி.ஜே.பி.க்கு ஆதரவாக வாக்களிப்போம் என சொல்லாததை தமிழிசை கவனித்துவிட்டு குஜராத், இமாச்சல் வெற்றியை கொண்டாட லட்டு கொடுக்கட்டும்!

click me!