பத்மாவதி பட விவகாரம் - ஹெச்.ராஜாவை வம்புக்கு இழுத்த கஸ்தூரி...

Asianet News Tamil  
Published : Nov 20, 2017, 09:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
பத்மாவதி பட விவகாரம் - ஹெச்.ராஜாவை வம்புக்கு இழுத்த கஸ்தூரி...

சுருக்கம்

kashthoori tease to h.raja

சித்தூர் ராணி பத்மினியின் கதை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டுள்ளது. நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்து உள்ளார். 

பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் என்பவர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார். படத்தில் சித்தூர் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் ராஜ புத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஜெய்ப்பூரில் நடந்த படப்பிடிபிப்பின்போது, உள்நுழைந்த எதிர்ப்பாளர்கள் ஷூட்டிங்கிற்காக போட்டிருந்த செட்டுகளை உடைத்தும் பணியாளர்களைத் தாக்கியும் உள்ளனர். படப்பிடிப்பு உபகரணங்களையும் அவர்கள் சேதப்படுத்தினர். இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியும் அந்த தாக்குதலில் காயமடைந்தார். 

பத்மாவதி படத்தன் போஸ்டர் வெளியீட்டின்போதும் தீவைத்துக் கொளுத்தி தங்கள் எதிர்ப்புகளைக் காட்டினர். மேலும் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் படம் வெளியானால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் இயக்குநருக்கு மிரட்டல் வந்தது.

படத்தின் டீசர் அண்மையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஆகாஷ் மாலில் வெளியிட திட்டமிட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக டீசர் வெளியிடப்படவில்லை. 

இதனிடையே அரியானா மாநில பாரதீய ஜனதாவின் தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளர் சுராஜ் பால் அமு தீபிகா மற்றும் பன்சாலியின் தலையை எடுப்பவருக்கு நாங்கள் ரூ. 10 கோடி பரிசு வழங்குவோம் எனவும் தேவைப்பட்டால் பாஜகவில் இருந்து விலகுவேன் எனவும் தெரிவித்திருந்தார். 

இந்த செய்தி குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பா.ஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கலாய்த்து உள்ளார். அதாவது, சூரஜ் பால் அமு, ஹெச்.ராஜவையே கூஜாவாக்கி விட்டார் எனவும் சுரஜ் பால் அமு பாஜகவுக்கு கிடைத்த சொத்து எனவும் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!