
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு பெற்றன.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் கடந்த 21 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
4-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை இன்றும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சோதனை நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோதனையின்போது, ரூ.60 கோடி வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் ரூ.1.3 கோடி ரொக்கம் மற்றும் ரூ.3 கோடி மதிப்புள்ள வெள்ளி, தங்கம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சோதனையில் 10 பினாமி வங்கி கணக்குகளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.