
ஜெயலலிதா மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொய் பேசியதாக கூறியது வேடிக்கையாகவும் விநோதமாக உள்ளது என்றும் முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரைப் பார்த்ததாகவும், இட்லி-சட்னி சாப்பிட்டதாக கூறியதெல்லாம் பொய் என்றும், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மதுரையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசியிருந்தார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சு பல்வேறு சர்ச்சை கேள்விகளை எழுப்பியுள்ளது.
‘இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, திண்டுக்கல் சீனிவாசன் அமைச்சராக இருக்க தகுதி அற்றவர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அமைச்ச்ர பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
மறைந்த ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அப்படி சிபிஐ விசாரிக்காவிட்டால் பணியில் இருக்கும் நீதிபதி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொய் பேசியதாக கூறியது வேடிக்கையாகவும் விநோதமாக உள்ளது என்றும் முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார்.
முதலமைச்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டால் அது குறித்து அரசு சார்பில் அறிக்கை வெளியிடுவது மரபு என்றும் ஆனால், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எந்த ஒரு அறிக்கையும் அரசு சார்பில் வெளியிடப்படவில்லை என்றும் முத்தரசன் குற்றம் சாட்டினார்.