பாலியல்வன்புணர்வுக் குற்றவாளிகளை காப்பாற்றும் பாஜகவுக்கு பெண்களை பற்றி பேச தகுதி உண்டா..? ஜோதிமணி சரவெடி..!

By Asianet TamilFirst Published Oct 24, 2020, 8:05 PM IST
Highlights

கொடூரமான பாலியல்வன்புணர்வுக் குற்றவாளிகளை வெட்கமில்லாமல் காப்பாற்றும் பிஜேபிக்கு பெண்களைப் பற்றிப்பேச என்ன தகுதியிருக்கிறது என்று கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
 

மனுதர்மத்தில் பெண்களைப் பற்றி இழிவாகக் கூறப்பட்டிருப்பதாக யூடியூப் சேனல் ஒன்றில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசினார். ஆனால், இந்து பெண்களைப் பற்றி திருமாவளவன் இழிவாகப் பேசியதாக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். திருமாவளவனுக்கு ஆதரவாக கூட்டணி கட்சிகள் களமிறங்கின. இந்நிலையில் திருமாவளவனுக்கு ஆதரவாக கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அதில், “மனுதர்மத்தில் பெண்களை இழிவுபடுத்தி வரும்பகுதியை அப்படியே வாசித்துள்ளார் திருமாவளவன். அதை வழக்கம்போல திரித்து மேலும் பெண்களை இழிவுபடுத்துகிறது பிஜேபி. கொடூரமான பாலியல்வன்புணர்வுக் குற்றவாளிகளை வெட்கமில்லாமல் காப்பாற்றும் பிஜேபிக்கு பெண்களைப் பற்றிப்பேச என்ன தகுதியிருக்கிறது? பெண்களை வெற்று உடலாகவும், காமப்பொருளாகவும் குறிப்பிட்டு இழிவுபடுத்தும் மனுதர்மத்தை தூக்கிப்பிடிப்பதுதான் ஆர்எஸ்எஸ்-இன் சித்தாந்தம்.
பெண்களுக்கெதிரான கொடும் பாலியல் குற்றங்கள் இம்மாதிரியான இழிவான சிந்தனையிலிருந்தே உருவாகின்றன. இதை முழுமூச்சாக எதிர்க்காமல் இங்கே பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாது. சுயமரியாதையும்,கண்ணியமும் நிறைந்த எந்த பெண்ணும்,மனிதரும் இந்த இழிவை ஆதரிக்க முடியாது. இதற்கு பிஜேபியின் அடிமை ,அதிமுக அரசின் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.” என்று தன்னுடைய பதிவில் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

click me!