திமுக கூட்டணியை சிதறடிக்க சதி... கதறும் திருமாவளவன்..!

Published : Oct 24, 2020, 05:17 PM IST
திமுக கூட்டணியை சிதறடிக்க சதி... கதறும் திருமாவளவன்..!

சுருக்கம்

எனக்கு எதிராக சனாதன கும்பல் தவறான பிரச்சாரம் செய்து வருகிறது என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.  

எனக்கு எதிராக சனாதன கும்பல் தவறான பிரச்சாரம் செய்து வருகிறது என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

பெண்களை இழிவு படுத்தும் மனுதர்ம நூலை தடைசெய்ய வேண்டும் என போராட்டம் நடத்திய திருமாவளவன் பிப்பர் கூறுகையில், ‘’பெண்களை இழிவு படுத்தும் மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும். அரசியல் ஆதாயத்துக்காக தன் மீது அபாண்டமாக பழி சுமத்துகின்றனர். திமுக கூட்டணியை சிதறடிக்கவே என் மீது திட்டமிட்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெரியார் பற்றிய இணையதளவழி கருத்தரங்கில் நான் பேசியதை தூண்டிவிட்டு துண்டித்து வெளியிட்டு இருக்கிறார்கள். எனது 40 நிமிட உரையை முழுமையாக பெண்கள் கேட்க வேண்டும். பெண்களை இழிவுபடுத்தினோம்  என்று அரசியல்க் ஆதாயத்திற்காக பழிசுமத்துகிறார்கள். மகளிர் குலத்தின் மீதான இழிவை துடைக்கும் போராட்டம் இது. திமுக கூட்டணியை சிதறடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்று அவதூறு பரப்புகிறார்கள்’’ என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி