கறுப்பர் கூட்டம் செம ஹேப்பி அண்ணாச்சி... உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு..!

Published : Feb 05, 2021, 11:51 AM IST
கறுப்பர் கூட்டம் செம ஹேப்பி அண்ணாச்சி... உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு..!

சுருக்கம்

 மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும், கல்வியறிவின்மை, அறியாமையை ஒழிக்கவும் பல்வேறு தகவல்களை வெளியிட்ட தனது கணவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது.

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் தொகுப்பாளர் சுரேந்திரன், செந்தில்நாதன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்த புகாரின்படி, கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன், செந்தில்வாசன் உள்ளிட்ட நால்வரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சுரேந்திரன், செந்தில் நாதன் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்

.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சுரேந்திரனின் மனைவி கிருத்திகா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்து இருந்தார். அவர் தனது மனுவில், கலாச்சாரம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும், கல்வியறிவின்மை, அறியாமையை ஒழிக்கவும் பல்வேறு தகவல்களை வெளியிட்ட தனது கணவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது.

ஒரே ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்துள்ள நிலையில், குண்டர் சட்டத்தை பயன்படுத்தியது அரசியல் உள்நோக்கம் கொண்டது. அவசரகதியில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது சட்டப்படியும், இயற்கை நீதிக்கு முரணானது’’ என அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வு, மனு குறித்து நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு இருந்தது.  இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் தொகுப்பாளர் சுரேந்திரன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்
இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை... கடைசியில் மண்டியிட்ட வங்கதேசம்..!