
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில், நடிகரும் மற்றும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் பேசினார். முதல்வர் பழனிசாமி, தன்னை பார்த்து பயப்படுவதாகவும், இந்த அரசு அமைய தான் முக்கிய பங்கு வகித்ததாக கருணாஸ் கூறியிருந்தார்.
அதோடு மட்டுமல்லாது, காவல்துறை அதிகாரியிடமும், யூனிபார்மை கழற்றிவிட்டு வந்து மோத தயாரா என்று சவாலும் விடுத்திருந்தார். இதுதொடர்பாக, 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இதனிடையே, இன்று அதிகாலை சாலிகிராமம் வீட்டில் கருணாசை காவல் துறையினர் அலேக்காக நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேசனுக்கு தூக்கி சென்று வைத்துள்ளனர்.
அவர் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த மறுநாளில் இருந்தே கருணாசை போலீசார் கண்காணிக்கத் தொடங்கினர். அவர் கைது செய்யப்படுவார் என்பதை முன்கூட்டியே அறிந்த கருணாஸ் ஆதரவாளர்கள் இரவு முழுவதும் வீட்டைச் சுற்றி குழுமியிருந்தனர்.
இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படிருந்தது. இன்று அதிகாலை அவரது விட்டுககுள் நுழைந்த போலீஸ் அவரை கைது செய்வதாக தெரிவித்தனர். பின்னர் அவருக்கு சிறிது நேரம் அவகாசம் கொடுத்து புறப்படச் செய்தனர்.
எப்போதும் பேண்ட் சட்டையில் இருக்கும் கருணாஸ் அரெஸ்ட் பண்ணப்பட்டபோது வேட்டி, சட்டை அணிந்திருந்தார். அப்போது அவரை சிறிது நேரம் கைது செய்ய விடாமல் தடுத்த அவரது ஆதரவாளர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், அவர், ஒரு சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டும் என்றால் சபாநாயகரின் அனுமதி பெற வேண்டும், அப்படி ஒரு அனுமதியைப் பெற்றார்களா என தெரியவில்லை என கூறினார்.
நான் எனது சமுதாய உரிமை குறித்து தான் பேசினேன். அதற்காக 307 சட்டப் பிரிவில் என் மீது வழக்குப் போட்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி அரசு திட்டமிட்டு பேச்சுரிமையைப் பறிக்கிறது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து அவர் நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.