டுவிட்டரில் தேசிய அளவில் முதல் இடம் பிடித்த கருணாநிதி! 2-ஆவது இடம் எதற்கு தெரியுமா?

First Published Aug 7, 2018, 9:03 AM IST
Highlights

திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் நேற்று மாலை ஏற்பட்ட பின்னடைவை அடுத்து இரவில் இருந்து ஹேஷ்டேக்கில் தேசிய அளவில் #karunanidhi என்ற ஹேஷ்டேக் முதலிடம் பிடித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு, சிறுநீர் பாதையில் ஏற்பட்ட தொற்று, காய்ச்சல் உள்ளிட்ட  பிரச்சனைகள் காரணமாக கடந்த 10 நாட்களாக சென்னை  காவேரி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சென்ற வாரம் திடீரென அவரது உடல் நிலை மிகுந்த மோசமடைந்தது.

 

ஆனால் டாக்டர்கள் அளித்த  தீவிர சிகிச்சையால்  கடந்த சில நாட்களாக முன்னேறி வந்த அவரது உடல்நிலையில் நேற்று மாலை  மீண்டும் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், அவரது வயோதிகம் காரணமாக முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருவதால்  அவருக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

 

மேலும்  மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் அவரது உடல் அளிக்கும் ஒத்துழைப்பை பொருத்து அவரது உடல்நிலையை தீர்மானிக்க முடியும் என்ற  பகீர் அறிவிப்பையும் மருத்துவமளை வெளியிட்டது. இதையடுத்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மருத்துவமனை முன்பு கண்ணீருடன் கூடியுள்ளனர். அவர்கள் எழுந்து வா தலைவா.. என கோஷமிட்டபடி நல்ல செய்தி கிடைக்க வேண்டும் விடிய, விடிய காத்துக் கிடக்கின்றனர்.

 

இதனிடையே நேற்று இரவில் இருந்து டுவிட்டர் ஹேஷ்டேக்கில் இந்தியா அளவில் கருணாநிதி #karunanidhi என்ற ஹேஷ்டேக் முதலிடமும், காவேரி மருத்துவமனை #KauveryHospital 2வது இடமும் பிடித்துள்ளது.

click me!