கோபாலபுரம் வீடு யாருக்கு? உயில் எழுதிவைத்த கருணாநிதி...

Published : Aug 13, 2018, 11:04 AM ISTUpdated : Sep 09, 2018, 08:26 PM IST
கோபாலபுரம் வீடு யாருக்கு? உயில் எழுதிவைத்த கருணாநிதி...

சுருக்கம்

கோபாலபுரத்தில் 2010ஆம் ஆண்டு தன்னுடைய 86வது வயது பிறந்த நாளிற்கு முதல் நாள் உயில் ஒன்றை எழுதியிருக்கிறார் கருணாநிதி.  

கோபாலபுரத்தில் 2010ஆம் ஆண்டு தன்னுடைய 86வது வயது பிறந்த நாளிற்கு முதல் நாள் உயில் ஒன்றை எழுதியிருக்கிறார் கருணாநிதி. அதன்படி கலைஞர் மற்றும்  அவரின் மனைவி தயாளு அம்மாவின் வாழ்நாளுக்குப் பின்னால் கோபாலபுர இல்லம் யாருக்கு என ஒரு தகவல்.

தமிழக அரசியலில் இரண்டு நூற்றாண்டுகளாக ராஜங்கம் செய்தவர், தமிழ்நாட்டின் முன்னேற்றட்திற்காக பல திட்டங்களை செயல்படுத்தியவர், தமிழ் அன்னையின் தவப்புதல்வன் என எண்ணிலடங்கா புகழுக்கு சொந்தக்காரர் கலைஞர் கருணாநிதி இயற்கை எய்தினார். ஐந்து முறை தமிழகத்தை முதல்வராக ஆட்சி செய்தவருக்கு, கடைசியில் அவர் ஆசைப்பட்டபடி அவரின் உயிருக்கு நிகரான அறிஞர் அண்ணாவின் அருகே நல்லடக்கம்  செய்யப்பட்டது. 94 வயதான இந்த மூத்த அரசியல் தலைவருக்கு, திரைத்துறை பிரபலத்திற்கு, அஞ்சலி செலுத்த நாடெங்கிலும் இருந்து பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைத்துறை பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் கருணாநிதி வாழ்ந்து வந்த கோபாலபுரம் வீடு யாருக்கு உயில் எழுதி வைத்துள்ளார்? அந்த வீடு அவர் எப்படி வாங்கினார் என பார்ப்போம்...   சென்னைக்கு வந்த  காலகட்டத்தில்  ஆரம்பத்தில் தியாகராய நகர் மற்றும் ராயப்பேட்டையில் இருக்கும் பாலாஜி நகரிலும் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தியுள்ளார். 1955-ம் ஆண்டு தான் அரசியலுக்கு வந்த  சமயத்தில் கோபாலபுரத்தில் வசித்து வந்த சரபேஷ்வர ஐயர் அவர்களிடம் இருந்து ஒரு வீட்டினை புதையல் என்ற படத்தில் வேலை பார்த்து அதில் கிடைத்த 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார்.   

1967ல் இருந்து அல்லும் பகலும் தமிழக மக்களின் நலப்பணிகளுக்காக மூடாத கதவுகளை உடைய கோபாலபுரம் வீடு, மற்ற முதல்வர்களின் வீடுகளையும் விட வசதி குறைவான எளிமையாக தான் இருக்கும் கோபாலபுரம் வீடு,   தமிழகத்திற்கு வரும் பெரும் அரசியல் தலைவர்கள் யாரும் கோபாலபுரம்  வராமல், சென்றதில்லை  கடந்த ஆண்டு தமிழகம் வந்த பிரதமர் மோடி, 2007 ஆம் ஆண்டு   புட்டபர்தி சாய்பாபா கூட  வந்திருந்தார். 

அதைத்தொடர்ந்து கடந்த 2010-ம் ஆண்டு கருணாநிதியின் 86-வது பிறந்தநாளின்போது கோபாலபுரம் வீட்டை அஞ்சுகம் அறக்கட்டளைக்கு தானமாக வழங்கியுள்ளார். அந்த உயிலின்படி கருணாநிதி மற்றும் அவரின் மனைவியின் வாழ்நாளுக்குப் பிறகு இந்த வீட்டை ஏழை எளியவர்களுக்கு இலவச மருத்துவ வசதியினை தரும் மருத்துவமனையாக மாற்றியமைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.  

இந்த அறக்கட்டளை கருணாநிதியின் தாய் அஞ்சுகம் அம்மாளின் பெயரில் செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் அறங்காவலர்களாகச் செயல்பட்டு வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!