கருணாநிதி மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு ! திமுக சார்பில் சென்னையில் அமைதிப் பேரணி !!

Published : Aug 07, 2019, 09:28 AM IST
கருணாநிதி மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு ! திமுக சார்பில் சென்னையில் அமைதிப் பேரணி !!

சுருக்கம்

முன்னாள் முதலமைச்சர்  கருணாநிதி நினைவு நாளையொட்டி  சென்னையில் தி.மு.க. சார்பில் அமைதி பேரணி  நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரை முருகன், கனிமொழி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான் தொண்டர்கள் பங்கேற்றனர்.  

மறைந்த முன்னாள் முதலமைச்சர்  கருணாநிதி கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி வயது மூப்பால் கடந்த ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி மறைந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காலை 8 மணிக்கு திமுக சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. 

அண்ணா சாலையிலிருந்து புறப்பட்ட அமைதி ஊர்வலம் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்றது.

இந்த ஊர்வலரத்துக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமை வகித்தார். இதில் திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, தூத்துக்குடி எம்பி கனிமொழி, நீலகிரி எம்பி ஆ ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த அமைதி ஊர்வலத்தில் மாநிலம் முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்..

PREV
click me!

Recommended Stories

விஜய் வாக்குகளால் கதிகலங்கும் திமுக..! கடைசியில் கனிமொழியை நம்பி இருக்கும் மு.க.ஸ்டாலின்..!
பணத்தை பெரிதாக நினைக்காமல் தியாக வாழ்க்கை வாழும் ஸ்டாலின்- உதயநிதி..! நெஞ்சு புடைக்க புகழும் கருணாஸ்..!