கருணாநிதி அப்பவே கூப்பிட்டாரு… நான் தான் போகல !! ஆதரவாளர்களை அதிர வைத்த அழகிரி !!

Published : Sep 12, 2018, 08:24 AM ISTUpdated : Sep 19, 2018, 09:23 AM IST
கருணாநிதி அப்பவே கூப்பிட்டாரு… நான் தான் போகல !! ஆதரவாளர்களை அதிர வைத்த அழகிரி !!

சுருக்கம்

தி.மு.க.,தலைவர் கருணாநிதி உயிருடன் இருந்தபோதே  கட்சியில் சேர அழைத்தும் நான் செல்லவில்லை' என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி அவரது ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.

கருணாநிதி மறைவிற்கு பின் அவரது நினைவாக சென்னையில் பேரணியை அழகிரி நடத்தினார். இதையடுத்த அவர் மதுரை திரும்பினார். இந்நிலையில் அழகிரி மாவட்டம் வாரியாக ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். இதன் முதல் கட்டமாக நேற்று தேனி மாவட்ட தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவரது ஆதரவார்கன் அழகிரிக்கு ஆலோசனைகளை அள்ளி வழங்கினர்.நீங்கள்   மாவட்டம் வாரியாக தி.மு.க., அதிருப்தி நிர்வாகிகள், தொண்டர்களை சந்திக்க வேண்டம் என வலியுறுத்தினர். ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் செய்தால் உண்மை நிலை தெரியும். உங்கள் பின் வருவதற்கு தயாராக உள்ளனர். கருணாநிதி பெயரில் பெரிய இயக்கம் துவங்கி, கட்சியில் நம்மை மீண்டும் சேர்க்க வைக்கும் அளவிற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.

அவர்களது ஆலோசனைகளை அமைதியாக கேட்டுக் கொண்ட அழகிரி,  கட்சியில் சேர்க்க அவர்கள் தயாராக இல்லை. கருணாநிதி இருந்தபோது அவரை அடிக்கடி பார்க்க செல்வேன். 2016 சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் குறித்து அவரிடம் அதிருப்தி தெரிவித்தேன்.

அப்போது, 'இவர்கள் நிர்வாகம் தெரியாதவர்களாக உள்ளனர். உனக்கான நேரம் வரும். அப்போது வா. தோல்வியுற்ற பின் அவர்களே உன்னை தேடி வருவார்கள். அதுவரை காத்திரு' என தெரிவித்தார். அப்போதுதான், 'கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை' என நான் வெளிப்படையாக தெரிவித்ததாக கூறினார்.

கடைசி நேரத்தில் கருணாநிதியின் உடல்நலம் கருதி எவ்வித நிர்பந்தமும் கொடுக்காமல் அமைதி காத்தேன். கருணாநிதி அழைத்தும் செல்லாமல் இருந்து விட்டேன். தற்போது மாவட்டம் வாரியாக ஆதரவாளர்களை சந்திக்க உள்ளாதாக அழகிரி தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!