கார்த்தி சிதம்பரத்தின் எம்.பி. பதவிக்கு ஆபத்து...? நீதிமன்ற உத்தரவால் உடைந்துபோன சிதம்பரம்..!

Published : Jan 07, 2020, 12:29 PM IST
கார்த்தி சிதம்பரத்தின் எம்.பி. பதவிக்கு ஆபத்து...? நீதிமன்ற உத்தரவால் உடைந்துபோன சிதம்பரம்..!

சுருக்கம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்கு சொந்தமான சொத்துக்களை கடந்த 2015-ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு ஒரு ஏக்கர் ரூ.4.25 கோடி என்ற விலைக்கு விற்பனை செய்தனர். சந்தை மதிப்பின்படி ஒரு ஏக்கர் ரூ.3 கோடி என்று குறிப்பிட்டு விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு மட்டும் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது.

வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி கார்த்தி சிதம்பரம், மனைவி ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனுக்களை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், கார்த்தி சிதம்பரத்தின் எம்.பி. பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.  

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்கு சொந்தமான சொத்துக்களை கடந்த 2015-ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு ஒரு ஏக்கர் ரூ.4.25 கோடி என்ற விலைக்கு விற்பனை செய்தனர். சந்தை மதிப்பின்படி ஒரு ஏக்கர் ரூ.3 கோடி என்று குறிப்பிட்டு விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு மட்டும் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது.

ஆனால், கார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் ரூ.6.38 கோடி மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி பெற்ற ரொக்கப்பணம் ரூ.1.35 கோடி ஆகியவை வருமான வரி கணக்கில் காட்டப்படவில்லை என்று அவர்கள் இருவர் மீதும் வருமான வரித்துறை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை நீதிபதி லிங்கேஸ்வரன் ஒத்திவைத்தார். இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது.

அதில், வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவியை விடுவிக்க இயலாது என சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, அடுத்த விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜராகாவிட்டால் வாராண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்து வழக்கை ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

PREV
click me!

Recommended Stories

234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..
டெல்டாவை தட்டி தூக்கிய விஜய்.. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் சக்சஸ்..? தவெகவில் மேலும் ஒரு அமைச்சர்