அன்று ஜெ.க்கு போட்ட அதே செக்‌ஷன்; வரலாறு திரும்புகிறதா? கார்த்திக் சிதம்பரம் கைதாகிறார்?...சிதம்பரத்தையும் சேர்க்க சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரம்

 
Published : May 16, 2017, 04:23 PM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
அன்று ஜெ.க்கு போட்ட அதே செக்‌ஷன்; வரலாறு திரும்புகிறதா? கார்த்திக் சிதம்பரம் கைதாகிறார்?...சிதம்பரத்தையும் சேர்க்க சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரம்

சுருக்கம்

karthy chidambaram wil be arrest

ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தில் அனுமதி பெற்றுக்கொடுத்த விவகாரத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக,  முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் எந்நேரமும் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

அன்னிய முதலீடு

ஐ.என்.எக்ஸ். மீடியா எனும் தனியார் நிறுவனம் கம்பெனி சட்டத்தின்படி, பதிவு செய்து, இந்தி பொழுதுபோக்கு சேனல்கள் உள்ளிட்ட பல சேனல்களை தொடங்க முடிவு செய்தது. இதற்காக மொரீஷியஷ் நாட்டில் இருந்து முதலீடுகளைப் பெற்றது. இதற்காக கடந்த 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ந்திதேதி நிதி அமைச்சகத்தின் கீழ் வரும் பொருளாதார விவகார துறையில் அன்னிய நேரடி முதலீடு தொடர்பாக விண்ணப்பம் செய்தது. 

நிதிஅமைச்சர்

இந்த ஐ.என்.எக்ஸ். நிறுவனத்தின் இயக்குநர்களாக இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோர் இருந்தனர். அப்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அதில் நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்து வந்தார்.

இந்த நிறுவனத்துக்கு முதலில் அனுமதி கொடுக்க மறுத்த அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம், அது குறித்து நிதி அமைச்சகத்துக்கு தெரிவித்தது.

 

அனுமதியில்முறைகேடு

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் நிறுவனம் கார்த்திக் சிதம்பரத்தை அனுகியது. இதையடுத்து, கார்த்திக் சிதம்பரம் தனது செஸ் மேனேஜ்மென்ட் சர்வீஸஸ் நிறுவனம்  மூலம் ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு ஒப்புதல் பெற்றுக் கொடுத்தார். இதில் கார்த்திக் சிதம்பரம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரூ.3 கோடிக்கு மேல் ஆதாயம் அடைந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளதாக சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கையில்(எப்.ஐ.ஆர்.) தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் சோதனை

இதையடுத்து, சென்னை, மும்பை, டெல்லி, குருகிராம் உள்ளிட்ட ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் வீடுகளில் என 14 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று காலையில் இருந்து அதிரடி சோதனை நடத்தினர். சென்னையில் மட்டும் 8 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

விசாரணை

அதன் பின் கார்த்திக் சிதம்பரத்தின் அலுவலகத்திலும் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கார்த்திக் சிதம்பரத்திடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தனர்.

எப்.ஐ.ஆர்.

இதையடுத்து, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்தின் முதலீட்டுக்கு அனுமதி பெற்றுக்கொடுத்தது தொடர்பாக நடந்த முறைகேட்டில், கார்த்திக் சிதம்பரம், பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி, கார்த்திக் சிதம்பரம் இயக்குநரான இருக்கும் செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ், அட்வான்டேஜ் ஸ்ட்ராடாஜிக் கன்சல்டிங் நிறுவனத்தின் இயக்குநர் பத்மா விஸ்வதான், நிதி அமைச்சகத்தின் அடையாளம் தெரியாத அதிகாரிகள் ஆகியோர் மீது சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

இதில், ஷீனாபோரா கொலை வழக்கில், ஷீனாபோராவின் தந்தை பீட்டர் முகர்ஜி, தாய் இந்திராணி முகர்ஜி ஆகியோர் டெல்லியில் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்குப்பிரிவுகள்

மேலும், கார்த்திக் சிதம்பரத்தின் மீது  இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 120பி ஆர்-டபிள்யு(கூட்டுச்சதி), பிரிவு 420(நம்பிக்கை மோசடி),பிரிவு 13(1), 13(1) ஆகிய பிரிவுகளில் சி.பி.ஐ. வழக்கு  பதிவு செய்துள்ளனர். 



ஊழல்தடுப்பு பிரிவு

இதில் பிரிவு 13(1), 13(2) என்பது, ஊழல் தடுப்புச்சட்டத்தில் வரும். லஞ்சம் பெறுதல், அரசு ஊழியர்களை பயன்படுத்தி பணம் சம்பாதித்தல், அரசு பதவியை முறைகேடாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளாகும். 

ஜெ..க்கு போடப்பட்ட அதே பிரிவு

இதில் 420 பிரிவு, 120 பிரிவு, ஊழல் தடுப்புச்சட்டம் ஆகியவற்றுக்கு உடனடியாக ஜாமீன் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரிவுகள் அனைத்துமே ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகும் போது அவர் மீதும், சசிகலா மீதும் போடப்பட்ட பிரிவுகளாகும். 

ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்தி சசிகலா எப்படி சொத்துக்களைச் சேர்த்தாரோ, அதேபோல ப.சிதம்பரத்தின் பெயரைப்பயன்படுத்தி கார்த்தி சிதம்பரம் இந்த நிறுவனத்துக்கு அனுமதி பெற்றுக்கொடுத்து ஆதாயம் அடைந்துள்ளார் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. 



சிதம்பரமும் சேர்க்கப்படுவாரா?

மேலும், தந்தை ப.சிதம்பரத்தின் பெயரைப் பயன்படுத்தி கார்த்தி சிதம்பரம் சொத்துக்களைச் சேர்த்துள்ளார், அதற்கு ப.சிதம்பரமும் உடந்தையாக இருந்துள்ளார் என்ற அடிப்படையில், அடுத்து வரும் நாட்களில் நடக்கும் விசாரணையில் ப.சிதம்பரத்தையும் இந்த வழக்கில் இணைக்க சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!