பல்வேறு சிக்கல்களுக்கு இடையே சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.
பல்வேறு சிக்கல்களுக்கு இடையே சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைதேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிவகங்கை தவிர்த்து மற்ற தொகுதிகளில் வேட்பாளர்கள் பெயரை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. வேட்புமனு தாக்கல் முடிய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், சிவகங்கை தொகுதிக்கு எப்போது வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ப. சிதம்பரம் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். எனவே, சிவகங்கை தொகுதியை அதே குடும்பத்துக்கு வழங்கக் கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். மேலும் சிவகங்கை தொகுதியை தனக்கு ஒதுக்கும்படி கேட்டுவருகிறார். இதனால், சிவகங்கை தொகுதி யாருக்கு என்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில் சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பில் ஏன் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பது பற்றி காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விளக்கம் அளித்தார். “காங்கிரஸில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்குதான் பதவி என்பதை ராகுல் காந்தி கடைபிடித்துவருகிறார். இதன் காரணமாக சிவகங்கை தொகுதியில் வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்றார். இதன்மூலம் சிவகங்கை தொகுதியில் ப. சிதம்பரம் குடும்பத்துக்கு சீட்டு கிடைப்பதில் சிக்கல் என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. சிவகங்கை மக்களவை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என முகுல் வாஷ்னிக் அறிவித்துள்ளார். இதனையடுத்து ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.