நாலு தொகுதியிலும் ஒத்த பொம்பள கூடவா உங்க கண்ணுல படல...? கம்யூனிஸ்டுகளை கதறவிடும் விமர்சனங்கள்..!

By Vishnu Priya  |  First Published Mar 24, 2019, 5:05 PM IST

தேர்தலுக்கு தேர்தல் தேய்ந்து சுருங்கி சுண்ணாம்பாய் கரைந்து கொண்டிருப்பது இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும்தான். கடந்த  சட்டமன்ற தேர்தலில் ‘மக்கள் நல கூட்டணி’ எனும் ஒரு காமெடி தளத்தை அமைத்து குட்டிக் கர்ணம் போட்டும், தேறாத நிலையில் இதோ இப்போது மீண்டும் தி.மு.க.வின் தோளில் ஏறி உட்கார்ந்து கொண்டுள்ளார்கள். 


தேர்தலுக்கு தேர்தல் தேய்ந்து சுருங்கி சுண்ணாம்பாய் கரைந்து கொண்டிருப்பது இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும்தான். கடந்த  சட்டமன்ற தேர்தலில் ‘மக்கள் நல கூட்டணி’ எனும் ஒரு காமெடி தளத்தை அமைத்து குட்டிக் கர்ணம் போட்டும், தேறாத நிலையில் இதோ இப்போது மீண்டும் தி.மு.க.வின் தோளில் ஏறி உட்கார்ந்து கொண்டுள்ளார்கள். 

மேடைக்கு மேடை ‘ஸ்டாலினை முதல்வராக்குவோம்! ஸ்டாலினை முதல்வராக்குவோம்!’ என்று இவர்கள் குரல் கொடுத்து, தி.மு.க. தலைவரை குஷிப்படுத்துவதற்காக குரளிவித்தை காட்டுவதை கம்யூனிஸ தொண்டர்கள் மிக முற்றிலுமாக வெறுத்தார்கள். ஆனாலும், ‘சீட் வாங்க இப்படி பேச வேண்டியது அவசியம்!’என்று சமாதானம் செய்தார்கள் காம்ரேடுகள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாய் குரல்கொடுத்ததன் விளைவாக தலைக்கு ரெண்டு சீட் கொடுத்தார் ஸ்டாலின். 

Tap to resize

Latest Videos

இந்த நான்கிலுமே ஆண் வேட்பாளர்களைத்தான் நிறுத்தியுள்ளன இரு கம்யூனிஸ்டுகளும். அதிலும் மூன்று பேர் வெகு பழைய முகங்கள், ஏற்கனவே பதவி சுகத்தை அனுபவித்த சீனியர் சிட்டிசன்கள். ஒரேயொருவர் மட்டுமே புது முகம் மற்றும் சீரியஸ் அரசியலை தாண்டிய இலக்கியவாதியும் கூட. ’பெண்ணுரிமை! ஆணாதிக்க எதிர்ப்பு! பெண்ணுக்கான குரல்! பெண்களுக்கான இட ஒதுக்கீடு! பெண்! பெண்! பெண்!....’ என்று எப்போதுமே ஓவர் சவுண்டு கொடுக்கும் கம்யூனிஸ்டுகள் இந்த நான்கில் ஒரு இடத்தில் கூட தன் கட்சி சார்பாக பெண் வேட்பாளரை நிறுத்திடவில்லை.

‘நான்கு தொகுதிகளில் ஏதோ ஒன்றிலாவது நிறுத்த ஒரு பெண் கூடவா உங்கள் இரு கம்யூனிஸ இயக்கங்களிலும் இல்லை? ’ என்று இரண்டு கம்யூனிஸ கட்சிகளின் காம்ரேடுகளிடமும் கேட்டபோது... “ஒதுக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை கவனிக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் இம்முறை வேட்பாளர்களை தேர்வு பண்ணியிருக்கோம். பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும்! என்பதில் எந்த மாற்றமும் இல்லை, வலியுறுத்துகிறோம்.” என்று மார்க்சிஸ்ட் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் சொல்ல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காம்ரேடுகளும் ‘தோழர் சொல்லியதே எங்களின் பதிலும்.’ என்றிருக்கிறார்கள். 

இந்த பதிலை மையமாக வைத்து விமர்சகர்கள் எழுப்பும் கேள்வி இதுதான்....”குறைவாக சீட்டுகள் ஒதுக்கப்பட யார் காரணம்? இரு கம்யுனிஸ கட்சிகளின் தலைமையிலும் உட்கார்ந்து அரசாளும் ஆண்களான நீங்கள்தானே? ஆக, உங்களுக்கு நூறு சீட் கொடுத்தால்தான்  ஏதோ கொஞ்சம் பெண்களுக்கும் கொடுப்பீர்களா? நாற்பது நாடாளுமன்ற தொகுதிகளே இருக்கும் தமிழகத்தில் உங்களுக்கென்ன முப்பது தொகுதிகளையா கொடுத்துவிடுவார்கள்? எந்த காலத்திலும் அப்படியொரு வலிமையான நிலைக்கு நீங்களும் போக மாட்டீர்கள், ‘பெண்ணுக்கு உரிமை கொடு’ என்று அடுத்தவனைப் பார்த்து வாய் வலிக்க கத்தும் நீங்கள், எந்த காலத்திலும் உங்கள்  இயக்கங்களிலும் அந்த உரிமையை கொடுக்கவே மாட்டீர்கள்.” என்று பொளந்து கட்டியுள்ளார்கள். என்னா போங்க காம்ரேட்ஸ்!

click me!