சசிகலாவுக்காக காத்திருக்கிறார்களா அமமுகவினர்...? அதிமுகவில் தினகரன் இணைவதில் பிரச்னையா..? புகழேந்தி பற்ற வைத்த நெருப்பு!

By Asianet TamilFirst Published Aug 28, 2019, 7:07 AM IST
Highlights

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா 2021 தேர்தலுக்கு முன்பாக சிறையிலிருந்து விடுதலை ஆவார். அவர் வெளியே வந்தவுடன் மாற்றம் ஏற்படும் என்றும் அமமுகவினர் எதிர்பார்த்த்து காத்திருக்கிறார்கள். ஆனால், அது நடக்குமா, இல்லையா என்பது சசிகலா வெளியே வரும்போது தெரிந்துவிடும்.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா விடுதலை ஆன பிறகு அதிமுக - அமமுக உறவில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி  எழுந்துள்ளது.

 
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்று அசத்தியது. ஆளுங்கட்சியாக இருந்தபோதும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல், நாடாளுமன்றத்ட் தேர்தல், வேலூர் தேர்தல் என தொடர்ச்சியாக அதிமுக தோல்வியடைந்துள்ளது. அதிமுக தரப்பில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உட்கட்சி பூசல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதேபோல அமமுக கட்சியைத் தொடங்கி போட்டியிட்டு வெறும் 5 சதவீத வாக்குகளை மட்டுமே தினகரன் பெற்றார்.  அதிமுகவில் நிலவிய சலசலப்புகளால் திமுக வெற்றி பெற்றுவிட்டதாகவும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் கருத்து நிலவிவருகிறது.
இதனால் அதிமுகவை வலுப்படுத்தும்விதமாக சசிகலாவுடன் எடப்பாடி பழனிச்சாமி இணையக்கூடும் என்று பொதுவெளியில் பேசப்படுகிறது. இந்தப் பேச்சுக்கு அமமுகவில் தற்போது ‘சைலண்ட்’டாக மாறிவிட்ட பெங்களூரு புகழேந்தி வலு சேர்த்திருக்கிறார். வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி அதிமுக - அமமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


“அதிமுகவுக்கு இப்போது ஒற்றைத் தலைமை தேவை. அந்தத் தலைமை சசிகலாவாக இருந்தால் சரியாக இருக்கும் என ஈபிஎஸ் தரப்பு நினைப்பது உண்மையாக இருந்தால் அதை நான் மனதார வரவேற்கிறேன். சின்னம்மாவை தலைவியாக ஏற்றுக்கொண்டால் தமிழகத்து அரசியல் வானில் மிகப்பெரும் திருப்பம் ஏற்படும். அப்படி ஒரு சூழல் வரும்போது தினகரனும் அதிமுகவில் சேர்ந்து இருக்க வேண்டியதுதான். ஆனால், ஜெயக்குமார் ஒருத்தர்தான் தகறாறு செய்கிறார். சின்னம்மா வந்துவிட்டால் அதையும் சரி பண்ணிருவாங்க. சீக்கிரமே அப்படியொரு நாள் விடியும்னு எதிர்பார்க்கிறேன்.” என்று புகழேந்தி பேட்டி அளித்திருந்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா 2021 தேர்தலுக்கு முன்பாக சிறையிலிருந்து விடுதலை ஆவார். அவர் வெளியே வந்தவுடன் மாற்றம் ஏற்படும் என்றும் அமமுகவினர் எதிர்பார்த்த்து காத்திருக்கிறார்கள். ஆனால், அது நடக்குமா, இல்லையா என்பது சசிகலா வெளியே வரும்போது தெரிந்துவிடும்.

click me!