காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்த முடியாது !! கர்நாடக அமைச்சர் தெனாவெட்டு பேச்சு !!

By Selvanayagam PFirst Published Jun 3, 2019, 9:16 PM IST
Highlights

பருவமழை பெய்து காவிரிப் படுகையில் நீர்வரத்து  அதிகரித்தால் மட்டுமே காவிரி மேலாண்மை வாரியத்தின்  உத்தரவுப்படி தண்ணீர் திறக்க முடியும் என கர்நாடக அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
 

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் , மேகதாது விவகாரம் தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கர்நாடக எம்பிக்கள் விவாதம் நடத்த ஏதுவாக அறிக்கை வழங்கப்படும் என தெரிவித்தார்.


.
கர்நாடக காவிரி படுகையில் உள்ள 4 அணைகளில் மொத்தம் தற்போது 13 டிஎம்சி தண்ணீர் தான் உள்ளது.  காவிரி படுகையில் நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு படி முழுமையான தண்ணீர் திறக்க முடியும். 

இல்லையெனில் விகிதாச்சார அடிப்படையில் தான் தண்ணீர் திறக்கப்படும். தற்போதைய நீர் இருப்பு நிலை குறித்து ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும் என அமைச்சர் சிவகுமார்  தெரிவித்தார்..

click me!