வலுக்கும் எதிர்ப்பு... முதல்வர் எடியூரப்பா பதவி விலகுகிறாரா? அவரே வெளியிட்ட முக்கிய தகவல்..!

By vinoth kumarFirst Published Jul 17, 2021, 4:05 PM IST
Highlights

டெல்லி சென்றுள்ள எடியூரப்பா, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது, உடல்நிலையை காரணம் காட்டி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை என எடியூரப்பா திட்டவட்டமாக கூறியுள்ளார். 

கர்நாடகாவில் கடந்த 2 ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் எடியூரப்பா விரைவில் மாற்றப்படுவதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வருகின்றன. எடியூரப்பாவுக்கு 78 வயது ஆகிவிட்டதால் முதல்வர் பதவியில் இருந்து மாற்றவேண்டும் எனவும் பாஜக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கு அனுப்பினர். இதனால் பாஜக மேலிடபொறுப்பாளர் அருண் சிங் கடந்த மாதம் பெங்களூருவில் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தினார்.

இந்நிலையில், டெல்லி சென்றுள்ள எடியூரப்பா, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது, உடல்நிலையை காரணம் காட்டி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடியூரப்பா;- முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவில்லை. அது குறித்து வரும் தகவலில் உண்மையில்லை. கர்நாடகாவில் நிலுவையில் உள்ள வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் மேகதாது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மட்டுமே பிரதமருடன் பேசியதாகவும் எடியூரப்பா விளக்கமளித்துள்ளார்.

click me!