முதல்வரை கோர்த்துவிட்ட முன்னாள் டிஜிபி.. கைவிரித்த சித்தராமையா!! கர்நாடகாவை கதிகலங்க வைத்த சசிகலா

First Published Mar 8, 2018, 10:56 AM IST
Highlights
karnataka chief minister siddaramaiah explained about sasikala issue


சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு அங்கு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரித்த அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா, சிறையில் சசிகலாவுக்கு டிவி, கட்டில், மெத்தை, மின்விசிறி, உதவியாளர்கள் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் ரூ. 2 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாகவும் அறிக்கை அளித்தார். 

ரூபாவின் குற்றச்சாட்டு பற்றி விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையிலான உயர்மட்டக் குழு, சிறையில் முறைகேடுகள் நடந்தது உண்மைதான். ரூ. 2 கோடி லஞ்ச விவகாரம் தொடர்பாக ஊழல் தடுப்பு துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்தது.

இதையடுத்து கர்நாடக அரசின் உத்தரவின் பேரில், சத்தியநாராயண ராவ் மீது ஊழல் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தன் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சத்தியநாராயண ராவ் மனு தாக்கல் செய்தார். அதில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உத்தரவின் பேரிலேயே சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் செய்துகொடுத்ததாக தெரிவித்தார்.

இதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சித்தராமையா, சிறை விதிகளுக்கு உட்பட்டு வசதிகள் செய்துகொடுக்குமாறு மட்டுமே நான் அறிவுறுத்தினேன். ஆனால், அதை மீறியிருந்தால், அவர்தான் சட்டத்தின் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">I had asked the DG Prisons to provide facilities to Shashikala as per the Prison Manual. But if he exceeded his brief he will face the law.</p>&mdash; Siddaramaiah (@siddaramaiah) <a href="https://twitter.com/siddaramaiah/status/971568840734896128?ref_src=twsrc%5Etfw">March 8, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

click me!