கன்னியாகுமரி: அதிகாரிகள் நடத்திய படகு அரசியல்..! கொந்தளித்த எம்எல்ஏ ஆஸ்டின்..!

By T BalamurukanFirst Published Nov 26, 2020, 10:36 PM IST
Highlights

சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரிக்கு ஆய்வு பணிக்காக வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படகு போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.அதன் படி படகு போக்குவரத்து உரிய அனுமதியுடன் தொடங்கியிருக்கிறது.

 சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தற்போது தான் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இயைதடுத்து நாளுக்கு நாள் வருகின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் கடல் நடுவே உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து தொடங்காமல் இருந்தது. இதற்கிடையே சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரிக்கு ஆய்வு பணிக்காக வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படகு போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.அதன் படி படகு போக்குவரத்து உரிய அனுமதியுடன் தொடங்கியிருக்கிறது.

நேற்று ஒரே ஒரு படகு மட்டுமே இயக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை. இந்த நிலையில் 2வது நாளாக இன்றும் படகு போக்குவரத்து காலையில் தொடங்கியது. தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து இன்று 2 படகுகள் இயக்கப்பட்டன.  கன்னியாகுமரிக்கு அதிகாலை படையெடுத்த சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை குடும்பமாக கண்டு ரசித்தனர். பின்னர் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் வகையில்  பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலகத்தை நோக்கி படையெடுக்க தொடங்கினர். அதன்படி படகு போக்குவரத்து கழக டிக்கெட் கவுன்டரில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பின்னர் மாஸ்க் அணிந்து கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து படகு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து எம்எல் குகன், எம்எல் விவேகானந்தர படகுகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து பயணிகள் படகில் ஏற்றப்பட்டனர். ஒரு படகில் 150 பேர் பயணிக்கும் நிலையில் 80 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தனர். படகில் பயணம் மேற்கொண்ட  சுற்றுலா பயணிகள் கடல் அழகையும், விவேகானந்தர் பாறையையும் கண்டுரசித்தனர். கடல் நீர்மட்டம் பிரச்னை காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை. இருப்பினும் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறையில் நின்றபடி திருவள்ளுவர் சிலையை கண்டு ரசித்தனர்.

கன்னியாகுமரி தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசியவர்கள்...  "உலகத்தில் எங்கும் காணமுடியாத சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை கன்னியாகுமரில் ஒரே இடத்தில் பார்க்க முடிகிறது. விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகுகளை இயக்கி வருகிறது. தற்போது 92 அடி நீளத்தில் 2 சொகுசு படகுகள் புதியதாக வாங்கப்பட்டுள்ளன. இந்த படகுகளை சூரிய உதயம் மற்றும் சூரியன் மறைவை காணவும் பயன்படுத்த வேண்டும்.

காலை சூரிய உதயம் நேரத்தில் கன்னியாகுமரி முதல் வட்டக்கோட்டை வரையிலும், மாலையில் சூரிய அஸ்தமன நேரத்தில் கன்னியாகுமரி முதல் மணக்குடி வரையிலும் படகு சேவையை நீட்டித்தும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் கன்னியாகுமரிக்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்றனர். 


விவேகானந்தர் பாறை திருவள்ளுவர் சிலை கடந்த 4 ஆண்டுகளாக பராமரிக்காமல் இருப்பதால் படகில் அழைத்துச் செல்லப்பட்ட திமுக எம்எல்ஏ ஆஸ்டின், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் மற்றும் அதிகாரிகள் படகில் சென்றனர். படகை விட்டு கீழே இறங்கினால் எங்கே அதிமுக ஆட்சியில் விவேகானந்தர் மண்டபம் பராமரிப்பு இன்றி காணப்படுவதாக புகார் சொல்லிவிடுவாரோ என்கிற பயத்தில் அதிகாரிகள் படகை விட்டு கீழே இறங்காமல் கரைக்கு அழைத்து விட்டார்கள் என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்கள் எம்எல்ஏ ஆதரவாளர்கள்.

click me!