கந்த சஷ்டி கவசம்.. கருப்பர் கூட்டம் திடீர் கதறல்... நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி..?

By Selva KathirFirst Published Jul 14, 2020, 8:00 AM IST
Highlights

இந்து கடவுள்களையும், புராணங்களையும் விமர்சிப்பதாக கூறிக் கொண்டு ஆபாச அர்ச்சனை நடத்தி வந்த கருப்பர் கூட்டம் திடீரென வருத்தம் தெரிவித்துள்ளதுடன் தற்போது கதறல் மோடில் உள்ளது தெரியவந்துள்ளது.

இந்து கடவுள்களையும், புராணங்களையும் விமர்சிப்பதாக கூறிக் கொண்டு ஆபாச அர்ச்சனை நடத்தி வந்த கருப்பர் கூட்டம் திடீரென வருத்தம் தெரிவித்துள்ளதுடன் தற்போது கதறல் மோடில் உள்ளது தெரியவந்துள்ளது.

கருப்பர் கூட்டம் என்கிற பெயரில் யூட்யூப் சேனல் நடத்தி வரும் ஒரு கும்பல் தொடர்ச்சியாக இந்து மத நம்பிக்கையை கேவலமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு வந்தது. அதிலும் கந்த சஷ்டி கவசத்திற்கு விளக்கம் கூறுவதாக கூறிக் கொண்டு அவன் வெளியிட்ட வீடியோ அறுவெறுப்பின் உச்சமாக இருந்தது. உண்மையில் கந்த சஷ்டி கவசத்திற்கு அர்த்தம் கூறி தெரியாதவர்களக்கு விளக்கம் அளிப்பது போல் அந்த வீடியோ இல்லை. மாறாக கந்த சஷ்டி கவசம் கேட்கும் அனைவர் மனதையும் நோகடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் வார்த்தையையும், உடல் மொழியையும் அவன் வீடியோவில் வெளிப்படுத்தியிருந்தார்.

இதற்கு முன்பு வரை இந்து கடவுள்கள் பலரை ஆபாசமாக பேசி அவன் வீடியோ வெளியிட்டிருந்தாலும் கந்த சஷ்டி கவசம் என்பது தமிழகத்தில் பெரும்பான்மை ஜாதியாக இருக்க கூடிய தேவர், நாடார்களின் வீடுகள், தொழில் நிறுவனங்களில் பெரும்பாலும் தினசரி ஒலிக்க கூடியது. இதனால் யார் இந்த கருப்பர் கூட்டம் என்கிற கேள்வி எழுந்தது. அதற்கு வலதுசாரி ஆதரவாளரான கல்யாணராமன் பதில் அளித்து தொடர்ந்து வீடியோ வெளியிட்டார். மேலும் கருப்பர் கூட்டத்தின் பின்னணி என்ன என்பதையும் தொடர்ந்து அவர் பதிவு செய்தார்.

இதனால் விஷயம் விஸ்வரூபம் எடுத்தது. இந்துக்களின் தொடர் புகார் காரணமாக கருப்பர் கூட்டம் அமைப்பின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது. ட்விட்டர் பக்கம் முடக்கப்படும் வரை கூட கந்த சஷ்டி கவசம் விவகாரத்தில் கருப்பம் கூட்டம் தொடர்ந்து எகத்தாளமான கருத்துகளையே கூறி வந்தது. மேலும் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்த அவன் விரைவில் இதை விட ஆபாசமான வீடியோக்களை வெளியிட உள்ளதாக கூறி ஒரு வீடியோவை வெளியிட்டார். இதனால் பிரச்சனை தீவிரமானது.

உடனடியாக பாஜக மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் கருப்பர் கூட்டம் அமைப்பிற்கு வெளிப்படையாக மிரட்டல்கள் விட ஆரம்பித்தனர். அதிலும் கல்யான ராமனின் மிரட்டல்கள் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இந்த நிலையில் வழக்கம் போல் இந்துக்களுக்கு எதிராக யார் பேசினால் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் சில சினிமா பிரபலங்கள் மற்றும் பத்திரிகை அமைப்புகள் கருப்பர் கூட்டத்திற்கு ஆதரவாக கருத்துகள் தெரிவித்தன. இதனை மாரிதாஸ் கையில் எடுத்து இந்துக்கடவுளை ஆபாசமாக அர்ச்சிக்கும் நபருக்கு ஆதரவாக பேசியவர்களின் பின்னணியை வெளியிட்டார்.

மேலும் கருப்பர் கூட்டத்திற்கு ஆதரவாக பேசிய பலரும் அவர்களின் கந்த சஷ்டி கவச வீடியோவை பார்க்காமலேயே ஆதரவாக இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கந்த சஷ்டி கவசம் குறித்து அவன் கூறிய கருத்துகளை சிறிய வீடியோவாக தொகுத்து வலதுசாரி அமைப்பினர் இது நியாயமா என்று கேள்வி எழுப்பினர். அப்போது தான் வழக்கமாக முற்போக்கு, பகுத்தறிவு பேசுபவர்கள் கூட அதில் இருந்த ஆபாசத்தை புரிந்து கொண்டனர். மேலும், அவன் விமர்சனமாக எதையும் முன்வைக்கவில்லை தனது வக்கிரம் மற்றும் குயபுத்தியை வெளிப்படுத்தியுள்ளதை ஒப்புக் கொண்டனர்.

இதனை அடுத்து இடதுசாரி, இஸ்லாமிய அமைப்பு மற்றும் திமுக ஆதரவாளர்கள் கூட அவனை கண்டித்தனர். மேலும் வழக்கமாக இது போன்ற பிரச்சனைகளில் இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்களுக்கு ஆதரவாக நிற்கும் திமுகவின் தமிழன் பிரசன்னா உள்ளிட்டோர் கூட அமைதி காத்தனர். காரணம் கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்தவர்களுக்கு ஆதரவாக பேசினால் இந்துக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என்று திமுக ஐடி விங் தங்கள் தரப்பை சேர்ந்தவர்களை முதலிலேயே அலர்ட் செய்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் திக தரப்பும் கூட இந்த விஷயத்தில் கருப்பர் கூட்டம் பக்கம் நியாயம் இல்லை என்று கருதி ஒதுங்கிக் கொண்டது.

இதற்கிடையே கருப்பர் கூட்டம் மீது மிக கடுமையான பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் அஞ்சி நடுங்கி பதறிப்போன கருப்பர் கூட்டம், கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியிட்ட வீடியோவுக்கு தங்கள் பேஸ்புக் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் தாங்கள் அனைவரும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்று கதறியுள்ளனர். இந்த விவகாரத்தில் அவர்கள் தங்களின் ஜாதியை தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி எழுகிறது. கந்த சஷ்டி விவகாரத்தில் தங்களுக்கு இடதுசாரிகள், திராவிட இயக்கங்கள், சிறுபான்மை அமைப்புகள், பத்திரிகை தோழர்கள் ஆதரவாக நிற்பார்கள் என்று எகத்தாளமாக பேசி வந்த கருப்பர் கூட்டம், அப்படி எதுவும் இல்லை வழக்கு பதிவு செய்யப்பட்டும் கூட யாரும் கண்டிக்கவில்லை என்பதால் இப்போது கதறல் மோடுக்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

click me!