செந்தில் பாலாஜியை நீ தொட்டுப் பாரு தம்பி... அப்புறம் நடப்பதை மட்டும் பாரு.. அண்ணாமலையை எச்சரித்த கனிமொழி..!

Published : Apr 02, 2021, 03:13 PM IST
செந்தில் பாலாஜியை நீ தொட்டுப் பாரு தம்பி... அப்புறம் நடப்பதை மட்டும் பாரு.. அண்ணாமலையை எச்சரித்த கனிமொழி..!

சுருக்கம்

செந்தில் பாலாஜியை நான் தாக்கிவிடுவேன் என்கிறார். நீ தொட்டுப் பார் தம்பி. திமுகவினர் மீது கை வைத்துப் பார். உங்களைப் போன்று எத்தனை பேரை பார்த்துவிட்டு வந்திருக்கிறோம். பெரியார் காலத்திலிருந்து எத்தனையோ அடிகள், எத்தனையோ ஏச்சுகள், எத்தனையோ மிரட்டல்களை எல்லாவற்றையும் ஊதித் தள்ளிவிட்டுதான் இந்தக் கட்சி இங்கு நின்று கொண்டிருக்கிறது.

இந்த மிரட்டல் வேலையை தமிழ்நாட்டில் வைத்துக் கொள்ளாதீர்கள் அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கனிமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் ஐ.பி.எஸ். முன்னாள் அதிகாரி அண்ணாமலையும் திமுக சார்பில் இளங்கோவும் போட்டியிடுகின்றனர். இந்தத் தொகுதியில் இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இந்நிலையில் அவரவக்குறிச்சியில் பூமத்தேவம் என்ற பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அண்ணாமலை, கரூர் தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியை மிரட்டி பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

அந்தக் காணொலியில் அண்ணாமலை பேசும்போது, “அரசியலுக்கு வந்த பிறகு அமைதியா இருக்கணும்னு நினைக்கிறேன். இந்த செந்தில் பாலாஜியை எல்லாம் தூக்கி போட்டு மிதிச்சேன்னா, பல்லு கில்லு எல்லாம் வெளியே வந்துடும். உன்ன மாதிரி எவ்வளவு பெரிய ஃபிராடுகளை எல்லாம் பார்த்துட்டு வந்திருக்கேன் நானு. நீ எல்லாம் ஒரு ஆளுன்னு.. நீ எல்லாம் ஒரு இது. உனக்கு பயந்து கை வைச்சா வயலன்ஸ் பண்ணினேன்னு மாத்திவிடுவியா? அண்ணாமலையை வயலன்ஸ்-ன்னு மாத்திடுவியா?

திமுககாரனுக்கு நான் எச்சரிக்கை வெச்சிட்டு போறேன். அகிம்சைவாதியா அரசியல் போராட்டத்தை நடத்திட்டு இருக்கேன். ஆனா, எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அது கர்நாடகா முகம். அதை நான் இங்கே காட்டவா, காட்டவா...? அப்படி காட்ட வேணாம்னு நினைக்கிறேன் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. 

இந்நிலையில், இது தொடர்பாக தேனி மாவட்டத்தில் பேசிய மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி;- அரவக்குறிச்சியில் ஒரு வேட்பாளர் இருக்கிறார். அவர் அண்ணாமலை. பேர் அண்ணாமலை என வைத்துவிட்டதால், தன்னை ரஜினிகாந்த் என நினைத்துக்கொண்டார். எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அதனைக் காட்ட வைத்துவிடாதீர்கள், செந்தில் பாலாஜியை நான் தாக்கிவிடுவேன் என்கிறார். நீ தொட்டுப் பார் தம்பி. திமுகவினர் மீது கை வைத்துப் பார். உங்களைப் போன்று எத்தனை பேரை பார்த்துவிட்டு வந்திருக்கிறோம். பெரியார் காலத்திலிருந்து எத்தனையோ அடிகள், எத்தனையோ ஏச்சுகள், எத்தனையோ மிரட்டல்களை எல்லாவற்றையும் ஊதித் தள்ளிவிட்டுதான் இந்தக் கட்சி இங்கு நின்று கொண்டிருக்கிறது.

திமுகவினரை, திமுகவைச் சேர்ந்த உடன்பிறப்புகளை யாரும் மிரட்டிவிட முடியாது. மிரட்டினீர்கள் என்றால், எழுந்து நின்றால் தாங்க மாட்டீர்கள். இந்த மிரட்டல் வேலையை தமிழ்நாட்டில் வைத்துக் கொள்ளாதீர்கள் என கனிமொழி ஆவேசமாக கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!