மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன கனிமொழி... அப்படி என்ன நடந்தது..?

Published : Oct 06, 2021, 05:58 PM IST
மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன கனிமொழி... அப்படி என்ன நடந்தது..?

சுருக்கம்

தமிழகத்தையும், தங்கள் குடும்பத்தையும் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் இடர்கள் நீங்க இந்த வாரியம் அரணாக அமையும்

தமிழகத்தையும், தங்கள் குடும்பத்தையும் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு புலம்பெயர் தமிழர் நல வாரியம் அரணாக அமையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கனிமொழி எம்.பி நன்றி தெரிவித்துள்ளார். 

வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் காக்க "புலம்பெயர் தமிழர் நல வாரியம் " என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அத்தோடு அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் பதிமூன்று பேரைக் கொண்டு இந்த வாரியம் அமைக்கப்படும் என்றும்  தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு குறித்து திமுக எம்.,பி.கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், ’’வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்கப் புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. தமிழகத்தையும், தங்கள் குடும்பத்தையும் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் இடர்கள் நீங்க இந்த வாரியம் அரணாக அமையும்’’என பதிவிட்டுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!