கில்லியாய் களத்தில் குதித்த கனிமொழி..! ஒரே ஆரவாரத்தில் தூத்துக்குடி மக்கள்...!

By ezhil mozhiFirst Published Mar 19, 2019, 7:54 PM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் மும்முரமாக உள்ளது என்றே கூறலாம். ஒரு பக்கம் கூட்டணி, வேட்பாளர் பட்டியல் தேர்தல் அறிக்கை, தேர்தல் பிரச்சாரம், தேர்தல் பறக்கும் பறக்கும் படையின் அதிர்ச்சி சோதனை, அமலில் உள்ள தேர்தல் விதி முறைகள், யார் காசு கொடுப்பாங்க.. யார் கொடுக்க மாட்டாங்க என்ற மக்கள் கருத்து.
 

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் மும்முரமாக உள்ளது என்றே கூறலாம். ஒரு பக்கம் கூட்டணி, வேட்பாளர் பட்டியல் தேர்தல் அறிக்கை, தேர்தல் பிரச்சாரம், தேர்தல் பறக்கும் பறக்கும் படையின் அதிர்ச்சி சோதனை, அமலில் உள்ள தேர்தல் விதி முறைகள், யார் காசு கொடுப்பாங்க .. யார் கொடுக்க மாட்டாங்க என்ற மக்கள் கருத்து. நம்ம தொகுதியில் இவர் வெற்றி பெற்றால் நல்லது செய்வாரா செய்ய மாட்டாங்களா.. என்ற சந்தேக பார்வையில் மக்கள்....

இதற்கிடையில் எப்படியும் வாக்கு வாங்கி விட வேண்டும் என்பதற்காக எந்த ஒரு விஷயத்தையும் சரியான நேர்தத்தில் கையில் எடுத்து அதற்காக போராட்டம் நடத்தி மக்கள் மனதில் நிற்க அரசியல் வாதிகள்  செய்யும் அலப்பறைகள் என ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம்.

இதற்கிடையில் தமிழகத்தை பொறுத்த வரையில் அதிமுக மற்றும் திமுக தலைமையில் கூட்டணி அமைந்து விட்டது. அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம்  தனித்து போட்டியிட உள்ளது. நாளை திமுக சார்பாக ஸ்டாலின் தேர்தல் பிரச்சார உரையை துவங்க உள்ளார். இதற்கிடையில் அண்ணனுக்கு முன்பாக தனது தொகுதியில் இன்று பிரச்சார உரையை தொடங்கி உள்ளார் கனிமொழி..

கனிமொழி நிற்கும் தூத்துக்குடி தொகுதியில் அடிக்கடி விசிட் செய்து வந்த கனிமொழிக்கு ஆதரவு நன்றாக உள்ளதாம். இவருக்கு எதிராக  பாஜக சார்பில்  அதே தொகுதியில் போட்டியிட உள்ளார் தமிழிசை. இந்த நிலையில் இன்றே தன் பிரச்சார உரையை தொடங்கி உள்ளார் கனிமொழி. இதன் காரணமாக தூத்துக்குடியில் களைகட்ட தொடங்கி உள்ளதாம் பிரச்சார உரை.மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை தேர்தல் முடிவுகள் அன்று தான் தெரிய வரும். அதுவரை பொறுத்திருந்து பார்க்கலாம். 

click me!