எங்கள் இனத்தை அழித்து விட நினைக்காதீர்கள்... பாஜகவுக்கு கனிமொழி சவால்..!

Published : Sep 07, 2019, 03:40 PM IST
எங்கள் இனத்தை அழித்து விட நினைக்காதீர்கள்... பாஜகவுக்கு கனிமொழி சவால்..!

சுருக்கம்

மொழியை அழித்துவிட்டால், இனத்தின் அடையாளத்தை அழித்துவிடலாம் என்ற எண்ணத்தில் மத்தியில் ஆளும் பாஜக தீவிரமாக செயல்படுவதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.   

மொழியை அழித்துவிட்டால், இனத்தின் அடையாளத்தை அழித்துவிடலாம் என்ற எண்ணத்தில் மத்தியில் ஆளும் பாஜக தீவிரமாக செயல்படுவதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். 

தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரயில்வே வாரியம் ஈடுபடுவதாக கூறி, திமுக சார்பில் சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட திமுக எம்.பி கனிமொழி, போர்க்களத்தில் பின் வாங்கியவர்கள் திமுகவினர் அல்ல எனக் கூறினார். மற்ற மாநில மொழிகளைக் காக்கவும், திமுக போராடி வருவதாகவும் கனிமொழி குறிப்பிட்டார். 

மேலும், சந்திரயான் 2 குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள கனிமொழி, நிலவை 95 சதவிகிதம் நெருங்கிய நமது விஞ்ஞானிகள் அடுத்த முறை 100 சதவிகிதம் சென்றடைவர் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியாவை பெருமிதப்படுத்திய இஸ்ரோ தலைவர் சிவனுக்கு வாழ்த்துக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை