டெல்லிக்கு ஆர்.எஸ்.பாரதியை அனுப்பிய ஸ்டாலின்! அதிர்ச்சியில் கனிமொழி!

By sathish kFirst Published Aug 21, 2018, 10:14 AM IST
Highlights

டெல்லியில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கான அனைத்து கட்சிகள் இரங்கல் கூட்டத்தில் தி.மு.க சார்பில் பங்கேற்க அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை ஸ்டாலின் அனுப்பியது கனிமொழிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கான அனைத்து கட்சிகள் இரங்கல் கூட்டத்தில் தி.மு.க சார்பில் பங்கேற்க அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை ஸ்டாலின் அனுப்பியது கனிமொழிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு டெல்லியில் அனைத்து கட்சிகள் சார்பில் பிரமாண்ட இரங்கல் கூட்டம் நடைபெற்றது. 

மத்திய அரசு சார்பில் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் தலைமைக்கும் மத்திய அரசின் சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டது. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்கும் வாஜ்பாய் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு வந்துள்ளது. 

அ.தி.மு.க சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை கலந்து கொண்டார். ஆனால் தி.மு.க சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் எஆர்.எஸ் பாரதி பங்கேற்றார். மாநில அரசியலுக்கு கலைஞர், தேசிய அரசியலுக்கு மாறன் என்கிற ஒரு எழுதப்படாத விதி தி.மு.கவில் கடைபிடிக்கப்பட்டு வந்தது.

மாறன் மறைவுக்கு பிறகு டெல்லியில் தயாநிதிமாறன் கோலோச்சினார். ஆனால் அவருடன் பிணக்கு ஏற்பட்டதை தொடர்ந்து டெல்லியில் தி.மு.கவின் முகமாக திருச்சி சிவா இருந்தார். ஒரு கட்டத்தில் கனிமொழி எம்.பி ஆன பிறகு டெல்லியில் தி.மு.கவின் பிரதிநிதியாக அவரே செயல்பட ஆரம்பித்தார். 

மாநில அரசியலுக்கு ஸ்டாலின் என்றும் மத்திய அரசியலுக்கு கனிமொழி என்றும் கலைஞர் ஒரு கணக்கு போட்டு அதனை செயல்படுத்திவந்தார்.கலைஞர் மறைவுக்கு பிறகும் டெல்லியில் அரசியல் செய்யும் வேலை தனக்கே விடப்படும் என்று கனிமொழி கருதி வந்தார். 

ஆனால் அவரது நினைப்பிற்கு மாறாக டெல்லியில் நடைபெற்ற ஒருமிகப்பெரிய நிகழ்வுக்கு தி.மு.கவின் பிரதிநிதியாக ஆர்.எஸ்.பாரதியை ஸ்டாலின் அனுப்பி வைத்தார். அதிலும் சைலன்டாக ஆர்.எஸ்.பாரதியை அனுப்பி வைக்காமல் அதனை அறிக்கை மூலமாக ஊடகங்களுக்கும் ஸ்டாலின் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனை அறிந்து கனிமொழி மிகவும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாகவே அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர். ஏனென்றால் கடந்த வாரம் கலைஞருக்கு இரங்கல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்ட செயற்குழுவிலும் கனிமொழிக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் டெல்லியில் தான் எம்.பியாக இருக்கும் போது தன்னை விடுத்து ஒரு முக்கிய நிகழ்வுக்கு ஆர்.எஸ்.பாரதியை ஸ்டாலின் அனுப்பியது கனிமொழிக்கு அதிர்ச்சியை மட்டும் அல்ல ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கலாம் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

click me!