தலைவர் ஆகிறார் ஸ்டாலின் !! 40 வருட அரசியல் வாழ்க்கைக்குப் பிறகு பதவியேற்கிறார் !!

Published : Aug 20, 2018, 08:55 PM ISTUpdated : Sep 09, 2018, 08:01 PM IST
தலைவர் ஆகிறார் ஸ்டாலின் !!   40 வருட அரசியல் வாழ்க்கைக்குப் பிறகு பதவியேற்கிறார் !!

சுருக்கம்

திமுகவின்  புதிய  தலைவர் மற்றும் பொருளாளர் பதவியை நிரப்புவதற்காகவும், தணிக்கைக்குழு அறிக்கையை சமர்ப்பிப்பதற்காகவும், திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 28 ஆம்  தேதி  செவ்வாய்கிழமை  சென்னையில் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி மரணம் அடைந்ததால் திமுக தலைவர் பதவி காலியாக உள்ளது. திமுகவின் அடுத்த புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இந்த மாத இறுதியில் பொதுக்குழு கூடும் என்று திமுக வட்டாரத் தகவல்கள் தெரிவித்திருந்தன..

இந்நிலையில் திமுக அவசர செயற்குழுக் கூட்டம் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. அதில் கருணாநிதி மறைவுக்கு  இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின் கருணாநிதியின் இறுதி நாட்கள் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசினார். திமுகவின் முக்கிய தலைவர்கள் கருணாநிதியின்  சிறப்பு குறித்து பேசினார்கள்.

இதையடுத்து விரைவில் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் என்றும் அதில் திமுகவின் புதிய தலைவர் மற்றும் தேர்ந்தெடுக்கப்படுவிர்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழுக் கூட்டம் வரும் 28 ஆம் தேதி செவ்வாய்கிழமை   காலை 9 மணிக்கு  சென்னை அண்ணா அறிவாலயத்தில்  நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

அந்த கூட்டத்தில் தணிக்கைக்குழு அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும், தலைவர் மற்றும் பொருளாளர் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த மு.க.அழகிரி, திமுகவின் பணம் வட்டிக்கு விடப்படவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து இந்த தணிக்கைகுழு அறிக்கை பொதுக் குழுவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!