பொள்ளாச்சியில் நடைபெற்ற விவகாரம் நாடு முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திமுக எம்பி. கனிமொழி தீவிரமாக களத்தில் குதித்துள்ளார் என்றே கூறலாம்

பெண்களுக்கு எதிராக நடந்துள்ள இப்படிப்பட்ட கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஒருவர் விடாமல் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது. இருந்தாலும் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை அறிவித்தார் கனிமொழி.
undefined
அதன்படி இன்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற இருக்கும் போராட்டத்தை முன்னெடுத்து செல்கிறார் கனிமொழி. ஆனால் இந்த போராட்டத்தை தடுக்க ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருந்தாலும் திட்டமிட்டபடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கனிமொழி அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கனிமொழி தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் மகளிர் இறங்கி உள்ளனர். தற்போது வரை பெரும்பாலானோர் சமூக வலைதளங்களிலும் செய்தியாளர்கள் சந்திப்பின் போதும் மட்டுமே அவர்களது எதிர்ப்புகளை தெரிவித்து வரும் இந்த தருணத்தில் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த கொடுமையான இழிவான சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. கனிமொழொயின் இந்த நடவடிக்கை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது.