கனிமொழிக்கு எதிராக தூத்துக்குடியில் போட்டியிடும் வ. கௌதமன்... அதிமுக கூட்டணி அறிவித்த பின்பே அடுத்த பரபரப்பு!!

Published : Mar 12, 2019, 02:10 PM ISTUpdated : Mar 12, 2019, 02:12 PM IST
கனிமொழிக்கு எதிராக தூத்துக்குடியில் போட்டியிடும் வ. கௌதமன்... அதிமுக கூட்டணி அறிவித்த பின்பே அடுத்த பரபரப்பு!!

சுருக்கம்

தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்னைகளுக்காக போராடி வரும் இயக்குனரும், தமிழ்ப் பேரரசு கட்சி தொடங்கிய அந்தக் கட்சியின் தலைவருமான வ. கௌதமன், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், அதிமுக கூட்டணி சார்பில் தமிழிசையும் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து சென்னை சேப்பாக்கத்தில் ஸ்டெர்லைட் குழும தலைவர் வேதாந்தாவின் உருவ பொம்மையை எரித்து இயக்குனர் கௌதமன் கைதானார். இதன் பின் ஸ்டெர்லைட் தொடர்பான பல போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில் வர இருக்கிற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும்படி கௌதமனுக்கு அங்கிருக்கும் போராட்டக் குழுவினர் சார்பில் அழைப்புவிடப்பட்டிருக்கிறதாம். தேர்தலில் வெற்றி தோல்வி ஒருபக்கம் இருந்தாலும் நாம் இந்த தேர்தல் பரப்புரை மூலம் ஸ்டெர்லைட் விவகாரத்தில் மத்திய, மாநில ஆளுங்கட்சிகள், எதிர்க்கட்சிகளின் முகமூடிகளைக் கிழிக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று கௌதமனிடம் சொல்லியிருக்கிறார்கள். 

இந்நிலையில், திமுக மாநிலங்களவை எம்.பி-யான கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட உள்ள நிலையில் கவுதமன் இந்த தொகுதியில் போட்டியிட உள்ளதும். அதிமுக கூட்டணியில் இந்த தொகுதி யாருக்கு ஒதுக்கியிருக்கிறார்கள் என்பது அறிவித்த பிறகே தேர்தல் களம் சூடுபிடிக்கும் என சொல்லப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?