ஸ்டாலின் அழகிரி லடாய் ... மண்டையை பிய்த்துக் கொள்ளும் குடும்பத்தினர்...

By sathish kFirst Published Aug 13, 2018, 7:12 PM IST
Highlights

அண்ணன் தம்பிகளை மீண்டும் இணைக்கும் முயற்சியில் இறங்கியது கருணாநிதியின் மகள்கள் செல்வி, முரசொலி செல்வம், முக தமிழரசு, கனிமொழி என ஒட்டுமொத்த குடும்பமும் அழகிரி கொடுக்கும் தொல்லையால் பஞ்சாயத்து பேசியிருக்கிறார்கள்.

திமுக தலைவர் கருணாநிதி மறைந்த ஐந்தே நாளில் தனது அரசியல் ரீ என்ட்ரிக்கு வெல்கம் கார்ட் போடவேண்டும் என தனது குடும்பத்தினருடன் வாதாடியிருக்கிறார் அழகிரி. கருணாநிதி சீரியசாக இருந்த நேரத்தில் கோபாலபுரம் வந்த அழகிரி, தனது குடும்பத்தின் உறுப்பினர்களுடன் தனித்தனியாக விவாதித்து முடித்திருக்கிறார்கள். இதனையடுத்து குடும்பத்தினர் அனைவரும் உட்கார்ந்து விவாதிக்கவிருக்கிறார்கள். 
குடும்பத்தினர் ஒன்று கூடி பேசுகையில்அழகிரியை திமுகவில் சேர்ப்பது பற்றியும் சொத்துக்கள் குறித்தும்  பேசியிருக்கிறார்கள். பலவருடங்களுக்குப் பின் மீண்டும் சந்திக்கும் அண்ணன் தம்பிகளை மீண்டும் இணைக்கும் முயற்சியில் இறங்கியது கருணாநிதியின் மகள்கள் செல்வி, முரசொலி செல்வம், முக தமிழரசு, கனிமொழி தான் என ஒட்டுமொத்த குடும்பமும் அழகிரி கொடுக்கும் தொல்லையால் பஞ்சாயத்து பேசியிருக்கிறார்கள்.

இந்த பஞ்சாயத்தில் கட்சி மற்றும் குடும்ப விவகாரங்களுக்கு டீல் பேசினார்களாம். கட்சியின் பொருளாளர் பதவியும், தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியும் எதிர்பார்க்கிறார் அழகிரி ஏற்கனவே கட்சிக்கு அழகிரியும், ஆட்சி அமையும் போது ஆட்சிக்கு ஸ்டாலினும் என்கிற பேச்சு எழுந்த நிலையில், இதற்கு ஸ்டாலின் சம்மதிக்கவில்லை. தற்போதும், இதை மறுத்து வருகிறார் ஸ்டாலின். கடந்த இரண்டு நாட்களாக குடும்ப உறுப்பினர்களுடன் அரகட்டளையில் தனது மகனுக்கு பதவி கேட்டு அடம்பிடித்திருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல், தன்னை கேட்காமல் செயற்குழுவில் எந்தமுடிவும் எடுக்கக்கூடாது,  முரசொலி அறக்கட்டளையின் கணக்கு வஹக்கு காட்டவேண்டும் என லந்து கொடுத்திருக்கிறார். இதனால் கடுப்பான ஸ்டாலின் பேராசிரியரிடம் இந்த விஷயத்தை கொண்டு சென்றிருக்கிறார். அவரோ அழகிரி கட்சிக்கு வந்தால், மற்ற பெரிய உறுப்பினர்களை ஓரம்கட்ட பார்ப்பார், அது குழப்பத்தில் முடியும் , இதுவரை கட்டிக் காத்தது மொத்தமாக நாசமாகிவிடும் என அட்வைஸ் செய்திருக்கிறார். 

இந்த தகவல் கிடைத்ததும் காலையிலேயே மெரினாவுக்கு சென்றுள்ளார் அழகிரி, இதக்கு முன்னதாக, அப்பா மறைந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகாதா பொது நீங்கள் சமாதிக்கு சென்று எந்த குழப்பமும் ஏற்படுத்த நினைத்தால், உங்கள் மீது உள்ள மரியாதி குறைந்துவிடும் என குடும்பத்தினர் அழகிரியிடம் மன்றாடியிருக்கிறார்கள் ஆனால் அஞ்சா நெஞ்சன் மசிவதாக இல்லை, சமாதிக்குப் போனதும் அஞ்சலி செலுத்திவிட்டு திமுகவில் உள்ள பெரும்பாலான தொண்டர்களின் ஆதரவு தனக்கு இருக்கிறது என  காலையிலேயே காரசாரமாக ஒரு பேட்டியை தட்டிவிட்டு சென்றார்.

click me!