’மாணவர்களுக்கு மத்தியில் நான் பேசினால் அரசு பதறுகிறது’... கமல்

By Muthurama LingamFirst Published Mar 2, 2019, 2:29 PM IST
Highlights

'நமது இந்திய வீரர் அபிநந்தன் மீண்டும் நம்மிடம் திரும்பி வந்தார். இது கொண்டாடப்பட வேண்டிய நேரம். இச்செய்தியை குருநானக் கல்லூரியில் இருந்து சொல்வதில் எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது’என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன்.

'நமது இந்திய வீரர் அபிநந்தன் மீண்டும் நம்மிடம் திரும்பி வந்தார். இது கொண்டாடப்பட வேண்டிய நேரம். இச்செய்தியை குருநானக் கல்லூரியில் இருந்து சொல்வதில் எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது’என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன்.

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.இதில், மாணவர்களின் நடன நிகழ்ச்சி மற்றும் ஆடை அலங்கார அணிவகுப்பை அவர் கண்டுகளித்தார்.

பின்னர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,’'’மாணவர்களுடன் தாம் உரையாடுவதைக் கண்டு அரசு பதற்றம் அடைந்திருக்கிறது. அதனால் அதிகமான கல்லூரிகளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க எனக்கு அனுமதி கிடைப்பதில்லை.. அதற்கு அரசுதான் காரணம் என்றும், மாணவர்களுடன் தாம் உரையாடுவதால் அரசு பதற்றம் கொண்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

அரசியல்வாதி தனது பையை நிரப்புவதை நிறுத்திவிட்டு, மனதை நிரப்ப வேண்டும் என்று பேசிய கமல், அரசியல் மாண்பை மீட்டெடுக்கும் கட்சியாக மக்கள் நீதி மய்யம் இருக்கும். ஊழல் செய்பவர்கள் அனைத்து இடங்களிலும் இருப்பார்கள் எனவும், அவர்களின் எண்ணிக்கையை இனியாவது கட்டுப்படுத்தவேண்டியது மாணவர்களின் கடமை.

அரசியலில் இறங்கி சாக்கடையை சுத்தம் செய்யும் பொழுது நமது உடம்பு சிறிது அழுக்காகிவிடுமே என்று கவலைப்படக்கூடாது. நமது அடுத்த தலைமுறை சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் இந்த அழுக்கை சுத்தம் செய்தே ஆகவேண்டும்.  இளைஞர்களும் பெண்களுமே இன்று பெரும்பான்மையாக இருக்கின்றீர்கள். எனவே தான் நீங்கள் அனைவரும் இந்த நாட்டினை கட்டமைப்பதற்கு முன் வரவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் அழைக்கின்றது. இந்த புரட்சியில் நீங்களும் இணைய வேண்டும்’ என்றார் கமல்.

click me!