மீண்டும் மீண்டும் அதையே சொல்லும் கமல்..! ஊடகங்கள் செய்ததும் தவறே..! உசுப்பேத்தும் ஆண்டவர்..!

Published : May 15, 2019, 05:52 PM IST
மீண்டும் மீண்டும் அதையே சொல்லும் கமல்..! ஊடகங்கள் செய்ததும்  தவறே..! உசுப்பேத்தும் ஆண்டவர்..!

சுருக்கம்

அரவக்குறிச்சியில் நான் பேசியது சரித்திர உண்மை என தோப்பூர் பிரச்சாரத்தின் போது இவ்வாறு பேசி உள்ளார்  

மீண்டும் மீண்டும் அதையே சொல்லும் கமல்..! 

அரவக்குறிச்சியில் நான் பேசியது சரித்திர உண்மை என தோப்பூர் பிரச்சாரத்தின் போது இவ்வாறு பேசி உள்ளார்.
 
அப்போது, "நான் பேசியதை முழுமையாக ஒளிபரப்பபடவில்லை. நான் பேசியது குற்றம் என்றால் என்னுடைய பேச்சை முழுமையாக ஒளிபரப்பாத ஊடகங்கள் செய்ததும் தவறே... என்னை அவமானப்படுத்த என்னுடைய கொள்கைகளை கையில் எடுக்காதீர்கள். என்றும் கமல் தெரிவித்துள்ளார். தீவிர அரசியலில் இறங்கிய நாங்கள் தீவிரமாக தான் பேசுவோம் என்றும் கமல் தெரிவித்துள்ளார். தற்போதைய தேவை சகிப்புத்தன்மை அல்ல..அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை தான்...

என்மீது குற்றம் என்றால் எனது உரையை பாதி ஒளிபரப்பிய ஊடகங்கள் செய்ததும் குற்றமே... மதக் கலவரத்தை தூண்டியது போன்று பேசியதை காட்ட முடியுமா..? சரித்திர உண்மை பேசியதற்காக என்மீது கோபப்படுகின்றனர். இந்து தீவிரவாதி என்ற எனது கருத்து மீதான நிலைப்பாட்டில் மாற்றமில்லை.

என்னை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்க முயற்சி செய்கின்றனர். அனைத்து மதங்களுக்கும் நான் சமமானவன். தீவிர ரசிகர்களை கொண்ட நான் தீவிர அரசியலில் முழுமையாக இறங்கி உள்ளேன்" என அவர் தெரிவித்து உள்ளார்.

ராஜேந்திர பாலாஜி முதல் மன்னார்குடி ஜுயர் வரை கமலின் பேச்சுக்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மீண்டும் மீண்டும் இந்துக்களின் உணர்வை பாதிக்கும் வண்ணம் கமல் தொடர்ந்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு மேலே பவருக்கு வந்த அசிம் முனீர்..! டம்மியாக்கப்பட்ட ஷாபாஸ் ஹெரீப்..!
ஆர்எஸ்எஸ் நீதிபதி.. நாடாளுமன்றத்தில் வார்த்தையை விட்ட டி.ஆர்.பாலு..! பொங்கியெழுந்த பாஜக எம்.பி.க்கள்!