நம்ம கதிர் ஆனந்தை இப்படி கவுத்திப்புட்டாகளே...! துரைமுருகனிடம் ஒரு துயர கேள்வி..!

Published : May 15, 2019, 04:42 PM IST
நம்ம கதிர் ஆனந்தை இப்படி கவுத்திப்புட்டாகளே...! துரைமுருகனிடம் ஒரு துயர கேள்வி..!

சுருக்கம்

 ராஜிவ் கொலை வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரை விடுதலை செய்ய, உச்சநீதிமன்றமே பச்சைக் கொடி காட்டிய பிறகும், தமிழக கவர்னர் மவுனம் சாதிப்பது வருத்தத்திற்குரியது: துரைமுருகன்.

* நதி நீர் இணைப்பு திட்டமென்பது நாட்டிற்கு தேவையான திட்டம். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கும் போது, நதிநீர் இணைப்பு குறித்து நாங்கள் நிச்சயம் வலியுறுத்துவோம்: பிரேமலதா. (மோடி மீண்டும் பிரதமராக....அப்ப இன்னும் அஞ்சு வருஷத்துக்கு இந்த நதிநீர் இணைப்பு பற்றி பேசமாட்டோமுன்னு சொல்றீங்களா பிரேமாக்கா?ன்னு தி.மு.க.காரங்க உங்களை கிண்டலடிக்கிறாய்ங்க.)

* தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் செயல்களுக்கு மத்தி மற்றும் மாநில அரசுகள் துணை போகாமல், நீதிமன்றம் மூலம் தடை பெற வேண்டும்: செ.கு.தமிழரசன். (என்னண்ணே, கமல் கூட்டணியில ஐக்கியமாகி, உலகநாயகனுக்கு ‘மக்கள் நாயகன்’ அப்படின்னு பட்டம் கொடுத்த கையோடு காணாமல் போனீங்க, இப்ப கமலையே வெச்சு செய்யுற நேரத்துலதான் மறுபடி வெளியில வந்திருக்கீங்க.)

* தமிழக தேர்தல் அதிகாரி ஒழுங்காக நடந்து கொள்ளாத காரணத்தினால், வேறொரு  அதிகாரியை பார்வையாளராக நியமித்து, வாக்கு எண்ணிக்கையை நடத்திட வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன். (நீங்க மாநில செயலாளரா இருந்தப்ப கூடத்தான் உங்க இயக்கம் எங்கேயும் ஜெயிக்கலை. அதுக்காக நீங்க ராஜினாமா பண்ணுனீங்களா? இல்ல உங்களை விலக்கிதான் வெச்சாங்களா? அதென்னங்க காம்ரேட், உங்களுக்கு ஒரு நியாயம், சத்யாவுக்கு ஒரு நியாயமா?)

* ராஜிவ் கொலை வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரை விடுதலை செய்ய, உச்சநீதிமன்றமே பச்சைக் கொடி காட்டிய பிறகும், தமிழக கவர்னர் மவுனம் சாதிப்பது வருத்தத்திற்குரியது: துரைமுருகன். (மெய்யாலுமாண்ணே! நம்ம கதிர் ஆனந்து இப்படி எம்.பி.யாகாம தடுத்து நிறுத்திப்போட்டானுவலே, அதை விடவாண்ணே இந்த வருத்தம் உங்களுக்கு பெருசாஇருக்குது?)

* அரசியல் வியாபாரியான செந்தில்பாலாஜிக்கு, கடந்த தேர்தலில் இங்கே வாக்கு கேட்டதை நினைத்தால் மனதுக்கு வருத்தமாக இருக்கிறது, அவமானம்: அமைச்சர் தங்கமணி. (சட்டசபையின் நட்ட நடுவுல நின்னு,கழகத்தின் புரட்சித்தலைவி அம்மா உள்ளிட்ட அமைச்சரவையை பார்த்து நாக்கை துருத்துன விஜயகாந்தின் மச்சானுக்கு இப்ப ஓட்டு கேட்டது மட்டும் பரவச ஆனந்தத்தை தருதாண்ணே?)

PREV
click me!

Recommended Stories

Thaimaman Thanga Mothiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் யாருக்கெல்லாம் கிடைக்கும்? தொடங்கியது கணக்கெடுப்பு..! பேரு குடுத்தாச்சா?
Rahul Gandhi: சாதி ரீதியான சர்ச்சை பேச்சு? ராகுல் காந்தி மீது பாய்ந்தது வழக்கு!