ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தில்லாக கேள்வி கேட்ட கமல்.. வழக்கம் போல டுவிட்டரில் கத்தி சுழற்றிய நம்மவர்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 24, 2020, 2:20 PM IST
Highlights

விசாரணை சரியாக நடந்ததா என்கிற சந்தேகத்துடனேயே பேரறிவாளனின் 30 ஆண்டு சிறைவாசம் முடியாமல் தொடர்கிறது. சட்ட, நீதிமன்றங்கள் கருத்தை கூறி விட்டன. 

பேரறிவாளனின் விடுதலை குறித்து சட்ட, நீதிமன்றங்கள் கருத்தைக் கூறி விட்டன. ஆனால் கவர்னர் எனும் ஒற்றை மனிதரின் கையொப்பம் எதற்காக காத்திருக்கிறது? பரவாயில்லை தாமதப்பட்ட நீதியையாவது தாருங்கள். பேரறிவாளனை விடுவியுங்கள் என மக்கள் நீதி மயத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்கலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது. எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுகுறித்து ஆளுனர் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதால், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகள் 7 தமிழர்களையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. முன்னதாக தமிழக அரசு 7 தமிழர்களையும் விடுவிக்க வேண்டும் என அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், ஆளுநர் அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

 

இதுதொடர்பாக தமிழக அமைச்சர்களும் ஆளுநரை நேரில் சந்தித்து பலமுறை வலியுறுத்தி உள்ளனர். அதே நேரத்தில் திமுக தரப்பிலும் இதுதொடர்பாக ஆளுநரை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து 7 தமிழர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அது தொடர்பாக அவர் ஆளுநரிடம் வழங்கிய கோரிக்கை மனுவில் சட்டரீதியாக மட்டுமல்லாமல்  மனிதாபிமான அடிப்படையிலும் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி யுள்ளார். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ராஜீவ் கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்ய வேண்டுமென்று ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம், 

2018 செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநர் அதன் மீது முடிவெடுக்காமல் உள்ளார். இது குறித்து ஆளுநரிடம் கூறியதற்கு முறையாகப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு ஸ்டாலின் கூறினார். இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், விசாரணை சரியாக நடந்ததா என்கிற சந்தேகத்துடனேயே பேரறிவாளனின் 30 ஆண்டு சிறைவாசம் முடியாமல் தொடர்கிறது. சட்ட, நீதிமன்றங்கள் கருத்தை கூறி விட்டன. ஆனால் கவர்னர் எனும் ஒற்றை மனிதரின் கையொப்பம் எதற்காக காத்திருக்கிறது. பரவாயில்லை,  தாமதப்பட்ட நீதியையாவது தாருங்கள். பேரறிவாளனை விடுவியுங்கள். இவ்வாறு கமலஹாசன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

அதிமுக, திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் அறிக்கை வெளியிட்டும், ஆளுநரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தி வரும் நிலையில் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேடபாளராக களமிறங்கியுள்ள கமல்ஹாசன் எத்தனை பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சிம்பிளாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டு கடந்து போவது அவர் மீது விமர்சனத்தை அதிகப்படுத்தியுள்ளது. களத்துக்கு வராமல் வெறும் டுவிட்டரின் கட்சி நடத்துகிறார் கமல்ஹாசன் என பலரும் அவரையுத் அவரது கட்சியையும் கலாய்த்து வருகின்றனர். 

 

click me!